நபிமார்கள் வரலாறு
நபிமார்கள் வரலாறு, ஸலாமத் பதிப்பகம், சென்னை, விலை 40ரூ.
சிறுவர், சிறுமியர்களுக்காக எழுதப்பட்ட நபிமார்கள் வரலாறு பாகம் 2ம் நூஹ் நபி, ஹுது, ஸாலிஹ் நபி ஆகியோரின் வரலாறு கூறப்பட்டுள்ளது. அபுல் ஹசன் அலீ அந்நத்வீ எழுதிய இந்த நூலை மவுலவி ஷேக் முகம்மது மழாஹிரி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சிறுவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.
—-
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், தொகுப்பும் உரையும் ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 215ரூ.
சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை தமிழ்ப்பெண் கவிஞர்களின் கவிதைகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. சங்ககாலப் பெண்கள் முதல் ஆண்டாவள் வரையில் பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பரவலாக அறிமுகப்படுத்தியதுடன் அதனை வாசிப்பதற்கும் ஒரு வாய்ப்பையும் இந்த தொகுப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மரபின் வேர்களைத் தேடுபவர்களுக்கும், பெண்ணியவாதிகளுக்கும், மாணவ, மாவணியர்களுக்கும் இந்த நூல் பெரிதும் உதவுகிறது. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.