எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும்
எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை.
எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு பதிவாக எம்.ஜி.ஆரின் எழுத்தையும் பேச்சையும் ஒன்று திரட்டி ஒரு பெரிய ஆவணமாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். எம்.ஜி.ஆரின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாக ரசிகர்களுக்கு உணர்த்தும் நூல். பேரறிஞர் அண்ணா மேல் எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம், கலைவாணர் பற்றிய கருத்து, சினிமாத்துறையை வளர்க்க எம்.ஜி.ஆருக்கு இருந்த எண்ணங்கள், அவரது பொன்மொழிகள், அண்ணாவின் தொண்டனானது ஏன்? காமராஜர் மேல் மரியாதை, சிவாஜி மேல் கொண்டிருந்த அன்பு, சினிமாவில் வாய்ப்புக் கேட்டு வந்தவருக்கும் மதித்து கடிதம்போடும் மாண்பு, கட்சி தொடர்பான கருத்துக்கள் உள்ளிட்ட எம்.ஜி.ஆரின் கருத்துக்களை அவர் பேசியதிலிருந்து எழுதியதிலிருந்தும் நமக்கு எடுத்துத்தந்துள்ளார். இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 14/12/2015.
—-
அறக்கட்டளைகள் பொது டிரஸ்ட் புதிய சட்டங்கள், சோ.சேசாசலம், நர்மதா பதிப்பகம், விலை 200ரூ.
அறக்கட்டளைகள், பொது ட்ரஸ்ட் பற்றிய புதிய சட்டங்களை விளக்கமாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதியுள்ளார் சட்ட நிபுணர் சோ.சேசாசலம். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.