மாநகராட்சி நகராட்சி சட்டங்கள்

மாநகராட்சி நகராட்சி சட்டங்கள், சோ.சேசாசலம், ஜீவா பதிப்பகம், பக்.280, விலை ரூ. 230 ஓர் அரசின் நிர்வாக கட்டமைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் பணி என்பது மிகவும் இன்றியமையாதது. அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைவதிலும், அடிப்படை வசதிகள், வரி வசூல், நிர்வாகம் போன்றவற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில், 1919-இல் இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டங்கள், அதன் தொடர்ச்சியாக இயற்றப்பட்ட நகராட்சி சட்டங்கள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் எண்ணிக்கை, மாநகராட்சியை நிர்வகிக்க மக்களால் […]

Read more

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும்

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு பதிவாக எம்.ஜி.ஆரின் எழுத்தையும் பேச்சையும் ஒன்று திரட்டி ஒரு பெரிய ஆவணமாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். எம்.ஜி.ஆரின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாக ரசிகர்களுக்கு உணர்த்தும் நூல். பேரறிஞர் அண்ணா மேல் எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம், கலைவாணர் பற்றிய கருத்து, சினிமாத்துறையை வளர்க்க எம்.ஜி.ஆருக்கு இருந்த எண்ணங்கள், அவரது பொன்மொழிகள், அண்ணாவின் தொண்டனானது ஏன்? காமராஜர் மேல் மரியாதை, சிவாஜி மேல் கொண்டிருந்த அன்பு, சினிமாவில் […]

Read more

குறிஞ்சிச் சுவை

குறிஞ்சிச் சுவை, ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா, ஜமாலியா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. குறிஞ்சிச் சுவையை தமிழர்கள் அறிந்து, புளகாங்கிதம் அடைய விரும்பி ஆசிரியர், மேற்கொண்ட முயற்சிக்கு தமிழகம் முழுவதும் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். வேழம் ஒன்று சருச்சரை வடிவமான கல் ஒன்றை பிடியெனக்கருதி பேதலிக்கும், கரும்புணக் களித்த புகர் முக வேழம் என்ற பாடலில் ஆசிரியர் அதை விளக்கும் முறை அருமை. தலைவனுடன் சென்ற மனது மீளுமோ என்ற ஐயத்தில் மஞ்ஞையுடன் தன்னை ஒப்பிட்டு, தலைவி ஒருத்தி கூறும் ஐங்குறு நூற்றுத் தகவலும், […]

Read more