மாநகராட்சி நகராட்சி சட்டங்கள்
மாநகராட்சி நகராட்சி சட்டங்கள், சோ.சேசாசலம், ஜீவா பதிப்பகம், பக்.280, விலை ரூ. 230
ஓர் அரசின் நிர்வாக கட்டமைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் பணி என்பது மிகவும் இன்றியமையாதது. அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைவதிலும், அடிப்படை வசதிகள், வரி வசூல், நிர்வாகம் போன்றவற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
இதில், 1919-இல் இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டங்கள், அதன் தொடர்ச்சியாக இயற்றப்பட்ட நகராட்சி சட்டங்கள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் எண்ணிக்கை, மாநகராட்சியை நிர்வகிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேயர், நகராட்சித் தலைவர், மாமன்ற மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் அதிகாரம், தேர்ந்தெடுக்கப்படும் முறை, மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களின் கடமை, திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் முறை, அதற்காக நிதி ஒதுக்கும் முறை, வரிவசூல், தொழில் வரி, நிலம் கையப்படுத்துதல், உரிமம் பெறுதல், மாநகராட்சிப் பகுதிகளில் தொழில்தொடங்கும் முறைகள், உரிமம் பெறும் சட்டங்கள், சட்டத் திருத்தங்கள், மாநகராட்சி தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூல் ஆசிரியர் விளக்கி இருப்பது கூடுதல் சிறப்பு.
நன்றி: தினமணி, 8/7/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818