லெமுரியா குமரிக்கண்டம்

லெமுரியா குமரிக்கண்டம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 130ரூ.

லெமுரியா – ஆராய்ச்சியாளர்கள் பலரை ஈர்த்த பெயர். தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியாக, உலக மக்கள் பலரும் கூறும் நிலப்பரப்பு. பூமிபந்தின் பல்வேறு இடங்களிலும் லெமுரியா இருந்ததாக அவரவர்கள் அடையாளம் காட்டினார்கள். ஆயினும், உண்மையில் லெமுரியா எங்கிருந்தது? பண்டைய தமிழர்களின் குமரிக்கண்டத்திற்கும், லெமுரியாவிற்கும் என்ன தொடர்பு? இரண்டும் ஒன்றா? தென் திசையே முன்னோர்களின் திசை என்றும், முன்னோர் வழிப்பாட்டைத் தென்திசை நோக்கியே செய்ய வேண்டும் என்பதும் இந்தியர்களின் நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கைக்கு, குமரிமுனைக்குத் தெற்காக இருந்த குமரிக் கண்டமே காரணமா? ஆதிமனிதர்கள் தோன்றி வாழ்ந்து செழித்த பகுதியாகவும் மானுடத்தின் தொட்டிலாகவும் லெமுரியா என்னும் குமரிக் கண்டம் விளங்கியதா? உலக நாகரிகங்களின் ஆதிப் பிறப்பிடமாகவும் லெமுரியா திகழ்ந்ததா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில்… வியக்க வைக்கும் உண்மைகளை உரைக்கிறார் நூலாசிரியர் கள் சுதா சேஷய்யன், ஜி. ஸ்ரீகாந்த். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.  

—-

 

மனநிர்வாகம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

நம்முடைய மனமே நமது முதன்மையான நண்பனும் மோசமான பகைவனும். எனவே மனம் வசப்பட வேண்டும். அதற்கு மன நிர்வாகத்தில் நாம் அக்கறை காட்ட வேண்டும் என் சில வழிமுறைகளை தொகுத்தளிக்கிறார் நூலாசிரியர் சி.எஸ்.தேவ்நாத். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *