ஆசைக்கிளியே அழகிய ராணி
ஆசைக்கிளியே அழகிய ராணி, அனுராதா ரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
480க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 365க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர் அனுராதா ரமணன். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, கதையை வேகமாக கொண்டு செல்வதில் வல்லவர். அதனால்தான் இவருடைய 4 நாவல்கள் தமிழிலும், ஒரு கதை தெலுங்கிலும், ஒரு கதை கன்னடத்திலும் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றிவாகை சூடின. ஆசைக்கிளியே அழகியராணி “உனக்காக உமா”, “குயில் வேட்டை” ஆகிய மூன்று நாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. மூன்று கதைகளையும், மூன்று முக்கனிகளுடன் ஒப்பிடலாம். வழக்கமான முத்திரையை இக்கதைகளில் ஆழமாகப் பதித்துள்ளார் அனுராதா ரமணன். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.
—-
இராமன் கதை, அருள் பதிப்பகம், சென்னை, விலை 430ரூ.
கம்பராமாயணத்தை பல கோணங்களில் ஆராய்ந்து, இந்த நூலை எழுதியுள்ளார் டாக்டர் எஸ். லோகாம்பாள். கம்பராமாயணத்தை உரையுடன் படிக்கும் உணர்வைத் தருகிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.