நல்லுறவுகள்
நல்லுறவுகள், இல.பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
குடும்ப வாழ்வில் உறவு நிலையில் தொடங்கி உலக நாடுகள் உறவு நிலை வரை எதிர்காலச் சந்ததியினருக்குப் படம் பிடித்துக் காட்டும் வகையிலான 19 தலைப்புகளில் பல்வேறு கருத்துகள் இடம் பெற்றுள்ள நூலாகும். உறவுக்கு கை கொடுக்கவும், அதன் வழி உலகம் உயரவும் வழிவகுக்கும் வகையில் நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 114/1/2015.
—-
ராணி பெற்ற முத்து, ஜ்வாலாமுகி ராஜ், கிருஷ்ணாலயா பதிப்பகம், நாமக்கல், விலை 350ரூ.
எயிட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் பற்றி எதுவுமே தெரியாத ஒரு காலகட்டத்தில், அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஏற்பட்ட ரத்தத்தின் மூலம் எயிட்ஸ் தொற்றி, சித்ரவதைப்பட்ட லாரி ஓட்டுனரைப் பற்றிய கதைதான் இந்நூல். சின்னஞ்சிறு குடும்பம் சிறு குடும்பம் சின்னா பின்னமாகிட, உற்ற உறவுகள் பட்ட துன்பம், உதிரம் குடிக்கும் ஓநாய்களின் ஓயாத வெறித்தனம், இப்படி எண்ணற்ற சம்பவங்களை யார்த்த நடையில் சுவாரஸ்யமாக படைத்திருக்கிறார் ‘ஜ்வாலாமுகி ராஜ்’. நன்றி: தினத்தந்தி, 114/1/2015.