வரலாறு படைத்த வைர மங்கையர்
வரலாறு படைத்த வைர மங்கையர், புதுகைத் தென்றல் வெளியீடு, சென்னை, விலை 200ரூ.
நாட்டுக்கு உழைத்து வரலாற்றில் இடம் பெற்ற பெண்களின் வரலாற்றை மனதைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் பேராசிரியர் பானுமதி தருமராசன். இரண்டு பாகங்களாக புத்தகம் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், ஈ.வெ.ரா. நாகம்மாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை, ருக்மணி அருண்டேல் உள்பட 22 பேருடைய வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இப்புத்தகத்தின் விலை 200ரூ. அடுத்த புத்தகத்தில் கவிக்குயில் சரோஜினி தேவி,அம்மு சுவாமிநாதன், கேப்டன் லட்சுமி சுவாமிநாதன், துர்க்பாய, தேஷ்முக் உள்பட 16 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கியுள்ளன. இதன் விலை 150ரூ. நன்றி: தினத்தந்தி, 14/1/2015.
—-
டாக்டர் உ.வே.சா, வாழ்க்கையும் தொண்டும், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
தமிழிலக்கியக் கருவூலங்களை, அரும்பாடுபட்டு, அலைந்து திரிந்து தேடிக் கண்டுபிடித்து, நுணுகி ஆராய்ந்து அச்சேற்றிப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையும், குறிப்பிடத்தக்க தொண்டுகளையும், முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்தளித்திருக்கிறார் பருத்தியூர் கே. சந்தானாராமன். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.