வரலாற்றில் எம்.ஜி.ஆர்.
வரலாற்றில் எம்.ஜி.ஆர்., வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 784, விலை 500ரூ.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பொதுவாழ்கையைப் பற்றி புரிதலை இன்றைய தலைமுறையினருக்கு நுட்பமாக எடுத்துச் சொல்லும் தொகுப்பு நூல் இது. கலைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய செயற்கரிய பணியை அவரோடு பழகியவர்கள் எழுத்தில் சொல்வது படிக்கப் படிக்க புதுமை. சிவாஜி, ம.பொ.சி., பழதுநெடுமாறன், கண்ணதாசன், சோ, சோலை, எம்.ஆர். ராதா, டைரக்டர் ஸ்ரீதர், நீதியரசர் இஸ்மாயில், மணியன், வாலி, பானுமதி என்று அவரோடு அன்பாக இருந்தவர்கள் பலரின் அரிய கருத்துக்களை ஒரு ஆவணம்போல் திரட்டித் தந்துள்ளார். வரலாற்றில் எம்.ஜி.ஆர். பாத்திரத்தை வெல்ல யாராலும் முடியாது என்பதற்கு இவர்களின் குரலே சாட்சி. நன்றி: குமுதம், 16/11/2015.
—-
மனஅழுத்தம் ஏற்படாமல் வாழ்வது எப்படி?, ஏ.கே. சேஷய்யா, சாய்பாபா பதிப்பகம், விலை 50ரூ.
மன அழுத்தம் ஏற்படுவதைத்தவிர்த்து, வாழ்க்கையில் பல வெற்றிகளைக் குவித்து சாதனைகளைப் புரிய இந்நூல் பேருதவியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.