தேர்தல் வழிகாட்டி,

தேர்தல் வழிகாட்டி, வி. சிதம்பரநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ. சோழர் காலத்திலேயே தேர்தல் முறை இருந்தது. காலத்துக்கு ஏற்றபடி அவ்வப்போது மாற்றங்கள் பெற்று வந்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் ஊரக, உள்ளாச்சி தேர்தல்கள் நடைபெற இருப்பதால், வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கு உதவும் வகையில், இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் வி.சிதம்பரநாதன். வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள், மனுவை வாபஸ் பெறுதல், சின்னங்கள் ஒதுக்கீடு, வாக்கு எண்ணிக்கை பற்றிய விதிமுறைகள்… இப்படி வாக்காளர்களும், வேட்பாளர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் இப்புத்தகத்தில் […]

Read more

நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, நமது பிரதமர்களின் கதை, ரா. வேங்கடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து வாழ்வதற்கு, தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜனநாயக சூழலைப்பெறுவதற்கு கணிசமான பங்களிப்பைச் செய்த நம் பிரதமர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவாழ்வு சுவாரசியங்களைச் சொல்கிற நூல். நன்றி: குமுதம், 3/8/2015. —- வானொலித் தகவல்கள், தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 110ரூ. அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பிறருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தினால் பாமரனும் புரிந்து […]

Read more

குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, டாக்டர் கோவி மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 356, விலை 275ரூ. சாகித்ய அகாடமி விருது பெற்ற, வரலாற்று இசை ஞானப் புதினம் இது. கதையின் நாயகி, குறிஞ்சி பிறப்பால் புலைச்சியாயினும், பிறவி இசை மேதை. மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடும் உறுதி. சமஸ்தானங்கள், ஜமீன்தாரர்கள், கலெக்டர்கள், வெள்ளைக்கார துரைகள் முதலியோர் ரசிப்பதற்காக அவர்களுக்காக பாடமாட்டேன் என்ற வைராக்கியம், நம்மை பிரமிக்க வைக்கும். கலைகளை வளர்த்த தஞ்சை சரபோஜி மன்னரே, அவளைக் காதலிக்கிறார். பின் தன் மகன் சிவாஜியும் அவளை […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 100ரூ. இந்து மதத்தின் வேதங்கள், உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் அருமை பெருமைகளை விளக்குவதோடு தனி மனித உயர்வுக்கும் நெறி சார்ந்த வாழ்க்கைக்கும் வேதங்களை மேற்கோள் காட்டி எழுதி இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   தகவல்கள் 42, அமரர் கோ. தென்கச்சி சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலைநகர், அனெக்ஸ் பெருங்குடி, சென்னை 96, பக். 160, விலை 90ரூ. […]

Read more

ஏழாம் பாவம்(களத்திர பாவம்)

ஏழாம் பாவம்(களத்திர பாவம்), பி.எஸ். கேசவன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ், பெருங்குடி, சென்னை 96, விலை 100ரூ. பெண் ஜாதகத்துக்கு அமையும் கணவன், ஆணின் ஜாதகத்துக்கு அமையும் மனைவி குறித்த விவரங்களுடன் ஒவ்வொரு கிழமைக்கும் உகந்த நாள், நட்சத்திர பலன்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், பரிகார முறைகள், திதிகள், சந்திராஷ்டமம், யோகங்கள், நேரங்கள், தோஷம், திருமண பொருத்தங்கள், தினப்பொருத்தம், கணப்பொருத்தம், சகுணங்கள், திருமண தடை நீங்க, ருது பலன்கள், பெண்கள் ஜாதக பலன்கள் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. நன்றி: […]

Read more

எங்கே அந்த சொர்க்கம்

எங்கே அந்த சொர்க்கம்?, வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 284, விலை 200ரூ. நூலின் அட்டையிலேயே கடந்த ஐம்பதாண்டு கால தமிழக திராவிட இயக்க வரலாற்றை அலசி ஆராயும் நாவல் என்ற விளக்கத்துடன் வெளிவந்துள்ள இந்நூலை நாவல் என்று நூலாசிரியர் எவ்வாறு வகைப்படுத்தினார் என்பது புலப்படவில்லை. திராவிட இயக்கம் குறித்த கூர்மையான விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்நூல் காட்சி தருகிறது. இரு தலைமுறையினர் இடையிலான கடித உரையாடல் வடிவில் தனது அரசியல் பார்வையை நூலாசிரியர் முன்வைக்கிறார். திராவிட இயக்கத்தின் பரிணாமமான கட்சிகளின் லட்சணம், சுயநலனுக்கு […]

Read more

இன்று ஒரு தகவல் (தொகுதி 1, 2)

இன்று ஒரு தகவல் (1, 2), தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, பெருங்குடி, சென்னை 96, இரு பகுதிகள் விலை ரூ. 600, 750. வானொலி சகாப்தத்தில், இன்று ஒரு தகவல் மூலம் அனைவரது உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். அவர் மறைவுக்குப் பின் அவரது ஆழ்ந்த கருத்துக்கள் தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் என்ற கருத்தில், இந்தப் படைப்புகள் சிறப்பாக வெளிவந்திருக்கின்றன. வளமான வாழ்வுக்கு சிறந்த கருத்துக்களை படிக்க விரும்புவோர் இந்த நூற்களை வாங்கலாம். […]

Read more