ஏழாம் பாவம்(களத்திர பாவம்)
ஏழாம் பாவம்(களத்திர பாவம்), பி.எஸ். கேசவன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ், பெருங்குடி, சென்னை 96, விலை 100ரூ.
பெண் ஜாதகத்துக்கு அமையும் கணவன், ஆணின் ஜாதகத்துக்கு அமையும் மனைவி குறித்த விவரங்களுடன் ஒவ்வொரு கிழமைக்கும் உகந்த நாள், நட்சத்திர பலன்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், பரிகார முறைகள், திதிகள், சந்திராஷ்டமம், யோகங்கள், நேரங்கள், தோஷம், திருமண பொருத்தங்கள், தினப்பொருத்தம், கணப்பொருத்தம், சகுணங்கள், திருமண தடை நீங்க, ருது பலன்கள், பெண்கள் ஜாதக பலன்கள் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 11/12/13.
—-
குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 75ரூ.
குழந்தை இலக்கியத்திற்கு அரிய சேவை செய்தவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பன். குழந்தைகளை நல்வழிப்படுத்த அவர் எழுதிய பாடல்கள் ஏராளம். பூஞ்சோலை உள்பட சில பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்து பணிபுரிந்தவர். ஆழ. வள்ளியப்பாவைப் பின்பற்றி கவிஞர்கள் ஆனவர்கள் ஏராளம். அவர்கள் குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களிடம், ஆளுக்கு ஒரு கவிதை பெற்று, இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 கவிதைகள் இதில் உள்ளன. குழந்தைக் கவிஞர் காட்டிய வழியில் இந்த கவிதைகள் கருத்தாழத்துடன் எழுதப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர்களான பி. வெங்கட்ராமன், நீரை. அத்திப்பூ ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு இந்தக் கவிதைகளைத் திரட்டி, நூலை சிறந்த முறையில் தயாரித்துள்ளனர். நன்றி: தினத்தந்தி, 11/12/13.