இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்
இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 532, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-188-8.html
புலிகளை வேட்டையாடாமல், புள்ளிமான்களை வளர்ப்பதில் பயனில்லை எனும் கட்டுரையில் துவங்கி, சுத்த ரத்தம் உடையவன் சும்மா இருகக முடியுமா? என்பது முடிய 40 கட்டுரைகள் டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, மிட்டல், டால்மியா, விஜய மல்லையா என்று பெரு முதலாளிகளின் மறுபக்கத்தை, வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் நூலாசிரியர். ஊழ்வினையை விட ஊழல் வினையில் நம்பிக்கையில் உள்ள அன்றைய, இன்றைய அமைச்சர்களும், பிரதமர்களும் இக்கட்டுரைகளில் நிறையவே இடம்பிடித்துள்ளனர். தவிரவும், உலக முதலாளிகள், இந்தியாவிற்குள் வந்து, நம் பொருளாதாரத்தை சுரண்டும் தகவல்களும் ஏராளம். புரட்சி பூக்க வேண்டம் என்று, புத்தக பூபாள மிசைக்கும் ஆசிரியர், பொன்னுலகைப் படைக்க கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, போலீசை அடக்கி, ஒடுக்கவாவத கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர வேண்டும் (பக். 16) என்று கூறுவது சற்று நெருடலாக உள்ளது. -பின்னலூரான்.
—-
ரசவாதி சிறுகதைகள், ரசவாதி, தென்றல் நிலையம், 12 பி, மேல சன்னதி, சிதம்பரம் 608 001, பக். 224, விலை 100ரூ.
கடந்த 1928ம் ஆண்டு பிறந்து, 66 வயது வரையில் வாழ்ந்த ரசவாதி, பல சிறந்த சிறுகதைகளை தமிழாக்கித் தந்திருக்கிறார். 1949ல் அவருக்கு திருமணம் நடைபெற்ற போதே நாடறிந்த புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். அமுதசுரபி நாவல் போட்டியில் அழகின் யாத்திரை என்ற நாவலுக்கு பரிசு பெற்றார். கலைமகள் நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டியில் ஆதார ஸ்ருதி என்ற நாவலுக்கு பரிசு பெற்றது இவரைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த மிகச் சிறந்த இலக்கியவாதியின், 22 சிறுகதைகள் அடங்கிய தொகுதி இது. அரங்கேற்றம் என்ற சிறுகதை, இந்த தொகுதியில் உள்ள கதைகளில் மிகச் சிறந்த கதை ஆகும். இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு. டிநன்றி; தினமலர், 22/12/13.