காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்
காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், விலை 120ரூ.
திக்குத் தெரியாமல் நிலை தடுமாறும் கப்பலுக்கு வழிகாட்டிக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம் போலக் காட்சியை எப்படி நடத்த வேண்டுமென்று வழிகாட்டி, தன்னலமற்ற தியாகத்திற்கு வழிகாட்டி, பொது வாழ்க்கைக்கான தொண்டு எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கு வழிகாட்டி, நாட்டின் வளர்ச்சிக்குச் செயல் வீரவராக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி, மக்கள் விரும்பும் தலைவராகவும் மக்களை நேசிக்கும் தொண்டராகவும் ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய பாங்கிற்கு வழிகாட்டி, உண்மையான நேர்மையான உழைப்புக்கு வழிகாட்டிக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்று நூலினை எளிய நடையில் இனிமையாக தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் அரங்க பரமேஸ்வரி.
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறையினர் அறியவேண்டும், தாங்களும் இந்த மனிதப் புனிதர் போல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் நூலை எழுதியுள்ள ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர்.
நன்றி: தினத்தந்தி, 14/9/2016