மனிதப் பிறவிக்கு முக்தி தரும் ஞான வள்ளல்
மனிதப் பிறவிக்கு முக்தி தரும் ஞான வள்ளல், ஞானேஸ்வரி, ஓங்காரம் வெளியீடு, விலை 600ரூ.
திருவருளை அடைய குருவருள் அவசியம் என்பார்கள், மெய்யன்பர்கள். இதைத்தான் ‘குருவின் திருமேனி கண்டாலே தெளிவு பிறக்கும்’ என்றார், திருமூலம்.
ஓங்காரநந்தா சுவாமிகளுடனான தனது நேரடி அனுபவங்கள், சுவாமிகளின் ஜீவகாருண்ய அனுபவங்கள், குருபக்தி, குருவின் பெருமைகள், குருவின் அவசியம் உள்ளிட்டவற்றையும் மகேஸ்வர புஜை, படி பூஜை, ஞானதீப வழிபாடு, குரு பூஜை போன்ற வழிபாடுகளை நடத்தும் முறைகளையும் நூலாசிரியர் ஞானேஸ்வரி எளிய தமிழில் விரிவாக விளக்கியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரமவாசியாகிவிட்ட நூலாசிரியை, சுவாமிகளின் ஆற்றலை பல கோணங்களில் – ஆசிரியராக, ஞானசிரியராக, கவிஞராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக, அதீத சித்திகள் கைவரப்பெற்ற சித்தராக, சோதனைகள் நிறைந்த உலகமா பூஜைகளை வெற்றிகரமாக முடித்து சாதனைகள் படைத்த சாதனையாளராக, ஜீவகாருண்யம் மனித குலத்தின்பால் மட்டுமன்று, அனைத்து ஜீவராசிகளின்பாலும் மிக்கவராக பல கோணங்களில் சுவாமிகளின் பிரபாவங்களை படம்பிடித்துக் காட்டியுள்ளார், எனவே இது சுவாமி ஓங்காரநந்தாவின் ‘சரிதை நூல்’ என்றே கூறலாம்.
நன்றி: தினத்தந்தி, 14/9/2016