நேரா யோசி!

நேரா யோசி!,  சுதாகர் கஸ்தூரி, பினாக்கிள் புக்ஸ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், பக்.144, விலை ரூ.150. மாத்தி யோசி என்ற சிந்தனை இன்றைய சமூகத்தில் எப்படி பலரின் பார்வையில் வக்கிரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நியாயமாக அங்கலாய்க்கும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கூறும் செய்தி – மாத்தி யோசி என்பதற்கு முன்பாக, நேரா யோசிப்பது எப்படி என்று அறிந்து கொள் என்பதுதான். அந்தச் சிந்தனையைத் தூண்டும் 24 அருமையான கட்டுரைகளை – இல்லையில்லை – பார்வைகளை நமக்குத் தருகிறார்! நேராக யோசிப்பதற்கும் ஒன்றின்மேல் எண்ணத்தைக் […]

Read more

வலவன்

வலவன், சுதாகர் கஸ்தூரி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ. ஓட்டுநர்களின் வரலாறு வாடகை கார் ஓட்டுநர்களின் உலகமே தனி. அனைவருக்கும் ஒரே பின்புலம் கிடையாது. தாங்கள் செல்லும் ஊர்களையும் வழிகளையும் மட்டும் அல்லாமல் தங்களுடைய வாடிக்கையாளர்களின் குணநலன்களையும் நினைவில் பதிய வைத்துக்கொள்ளும் அலாதியான பண்புள்ளவர்கள். கீதோபதேச பார்த்தசாரதியைப் போலவே நியமம், கருமம் பற்றிப் பேசுகிறார் மஞ்சித் சிங் என்ற ஓட்டுநர். சோட்டானிக்கரை பகவதியின் பெருமையைப் போற்றுகிறார் பஷீர். வளரிளம் பருவப் பெண்ணின் பொய்க் குற்றச்சாட்டில் மனம் ஒடிந்து தற்கொலை செய்துகொள்கிறார் ஆதிமூலம். குடும்ப மரபைக் […]

Read more

டர்மரின் 384

டர்மரின் 384, சுதாகர் கஸ்தூரி, கிழக்குப் பதிப்பகம், பக். 88, விலை 80ரூ. ஒரு நாவலை எடுத்தவுடன், அதை ஒரே மூச்சில் படித்து விட வேண்டும் என்ற மனநிலை வர வேண்டும். அவ்வகையில் சுதாகர் கஸ்தூரி எழுதிய, ‘டர்மரின் 384’ என்ற குறுநாவல், 24 தலைப்புகளில் விரிந்து செல்கிறது. அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டிகள், புகழ், பெருமை, பணத்திற்காக விலை போக கூடிய அறிவாற்றல் இது மட்டுமல்லாமல், நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் இவற்றை கதைக் […]

Read more