பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, விலை 200ரூ.

வேடிக்கையில்லை. இதுபோன்ற ஒரு நிலையை நம்மால் அடைய முடிந்தால் மட்டுமே உணர முடியும். இது மொகமது ஆமிர் கானின் தன் வரலாறு. இதில் அவரது சுகமான நினைவுகளும், சந்தோஷப் பகிர்வும் இல்லை.

பலவிதமான வழக்குகளில் பு9னைவாக சேர்க்கப்பட்டு வதைக்கப்பட்டவர். சந்தேகமும், குறிப்பிட்ட மதமும் பொதுப்புத்தியில் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு நிலை நிறுத்தப்படுகின்றன. அத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்டவர் மொகமது. அதற்காக வலியை சிரமேற்கொண்டு இப்போது வெளியேறி, அதே துயரை அனுபவித்து வருபவர்களு.க்கு உதவுகிறார்.

மொகமது மீது செலுத்தப்பட்ட வன்முறைகள், அவர் பட்ட பாட்டை படித்துப் பார்த்தால் கல் நெஞ்சமும் கரையும். நாம் நம்பிக்கை வைத்திருக்கிற நீதித் துறைக்கும் இருண்ட பக்கம் இருக்கிறது என துல்லியமாகக் கூறுகிறது இந்நூல்.

சிறுபான்மை மக்களைப் பேணிக் காப்பாற்றும் நிலை போய் அவர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் சளைக்காமல் போராடிப் தட்டிப் பறிக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் சளைக்காமல் போராடிப் பெற்ற வாழ்வுச் சித்திரம் இது. இதில் சட்டத்தின் கூறுகள் இருக்கின்றன. அவை வேண்டுமென்றே வளைக்கப்படுகிற துயரம் இருக்கிறது. இன்னமும் மறுக்கப்படாத நீதி மிச்சமிருக்கிறது என்பதுதான் இந்தப் புத்தகத்தின் பெரும் ஆசுவாசம்.

வெளிச்சம். மொழிபெயர்ப்பில் அப்பணசாமி சுமுகமாக இருக்கிறார். விழுங்கத் தயங்கும் இடர் சொல் எதுவும் இல்லை.

நன்றி: குங்குமம், 30/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *