கல்வெட்டுகளில் தேவதாசி
கல்வெட்டுகளில் தேவதாசி, எஸ்.சாந்தினி, விஜயா பதிப்பகம், விலை: ரூ.100.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரான எஸ்.சாந்தினிபீ எழுதிய சமீபத்திய நூல். ‘இடைக்கால தென்னகக் கோயில்களில் பணிப்பெண்கள்’ என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம்.
ஆணுக்கு நிகராக தேவரடியார்கள் பெற்ற சன்மானம், கோயில்களுக்கு அவர்கள் வழங்கிய நன்கொடைகள், அவர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போரட்டம் உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்களைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் இந்நூலில் விவரித்துள்ளார். தேவரடியார் முறையின் தோற்றம் தொடங்கி 1947-ல் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்’ வரையிலான வரலாறு, விரிவான சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது
.- செ.இளவேனில்.
நன்றி. தமிழ் இந்து. 29.02.2020
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818