அசோகர்
அசோகர், ஒரு பேரரசின் வாழ்வும் பண்டைய இந்தியாவின் வரலாறும், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.272, விலை ரூ.300.
பேரரசர் அசோகரின் வரலாறு, ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
‘அரியணை என்னுடையது என்றால் கடவுள்கள் அதை எனக்கு எப்படியாவது சொந்தமாக்கட்டும்’ என்று அறிவித்த அசோகர், பின்னாளில் தனது சகோதரர்களைக் கொன்று விட்டுதான் அரியணை ஏறினார் என்பதை பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அரச பதவிக்கு வந்தவுடனேயே தனது வன்முறை ஆட்டத்தை அசோகர் தொடங்கிவிட்டதாக அசோகாவதனம் குறிப்பிடுகிறது. கையில் அகப்பட்ட அப்பாவிகளை விதவிதமாக வதைத்துக் கொல்வதற்காக கிரிகா என்பவனையும் அசோகரின் நரகம் என்ற சிறைச்சாலையையும் பாடலிபுத்திரத்தில் அமைத்திருந்த அசோகர், சிற்றின்பங்களில் மூழ்கி ‘காம அசோகா’ என்றும் அழைக்கப்பட்டதாக தாரநாத லாமா பதிவு செய்துள்ளார்.
கலிங்கப் போருக்கு பிறகே வன்முறையிலிருந்து தம்மத்துக்கு அசோகர் திரும்பினார். கலிங்கப் போரில் ஒரு லட்சம் பேரும், போருக்குப் பிறகு அதைவிட அதிகமானோரும் பலியானதாகவும், பெரும் எண்ணிக்கையிலானோர் கலிங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அசோகரின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
கலிங்கப் போருக்குப் பிறகு அசோகரிடம் நிகழ்ந்த மாற்றங்களுக்கு, அவர் ஏற்கனவே பெளத்த கருத்துகளை உள்வாங்கியிருந்ததே காரணம்.
மகா வம்சம், தீப வம்சம், அசோகாவதனம், மகாபோதி வம்சம், கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு அசோகர் குறித்த புனைவுகளையும் நிஜங்களையும் சமரசமின்றி தொகுத்துள்ளதே இந்நூலின் சிறப்பு.
நன்றி: தினமணி, 28/3/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/9789390958153_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818