கடல் பயணங்கள்
கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ.
பயணிகளால்தான் பாதை உருவானது. அதுதான் உருண்டையான உலகின் இரு முனைகளை இணைக்க உதவியது. வாஸ்கோடகாமா, மார்கோபோலோ, கொலம்பஸ் என பன்னிரண்டுபேர் கடலோடிகளாகப் பயணித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடல்வழிப் பாதைகளையும் அதன் வழிசென்று பல நாடுகளையும் கண்டுபிடித்த வரலாறு. கதைபோல் சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யம்!
-ஆர்.நாகராஜன்.
நன்றி: குமுதம், 3/1/2018