கொஞ்சம் பயமாய் இருக்கிறது
கொஞ்சம் பயமாய் இருக்கிறது, நர்மதா, படிவெளியீடு, விலை 90ரூ.
சுற்றி நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க முயலாமல், உள்ளுக்குள் நொறுங்கி வெளியே தைரியசாலியாய் வேஷம் போடும் மனத்தின் மனக்குரலாய் ஒலிக்கும் கவிதைகள். நேசம், பாசம், பரிதவிப்பு, நெகிழ்ச்சி என்று ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடு.
-ஆர்.நாகராஜன்.
நன்றி: குமுதம், 3/1/2018