இந்தியப் பயணம்
இந்தியப் பயணம், ஜெயமோகன், கிழக்கு, பக். 136, விலை 125ரூ.
தான் கேள்விப்படும் விஷயத்தையே சுவாரசியமாக எழுதக்கூடியவர், ஜெயமோகன். தான் பார்த்த, உணர்ந்த, அனுபவித்த விஷயங்களை எப்படி எழுதுவார்? அப்படிப்பட்ட உணர்தலின் பதிவுதான், இந்தியப்பயணம்.
அவர், இந்தியாவின் சில பகுதிகளுக்கு, 2008ல், நண்பர்களுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு, அதன் அனுபவங்களை, இணையத்தில் பதிவிட்டார். அது, அச்சாகி வந்துள்ளது, இது இந்தியா குறித்த நம் கண்களுக்கு, ஜன்னல் கதவை திறப்பதுபோல.
நன்றி: தினமலர், 19/1/2017.