பயாஸ்கோப்
பயாஸ்கோப், கிருஷ்ணன் வெங்கடாசலம், சந்தியா பதிப்பகம், விலை 275ரூ.
தமிழர்களின் வாழ்வைப் பொறுத்தவரை சினிமா முக்கியப்பகுதி. தான் விரும்பிய தமிழகமும் விரும்பிய 50 திரைப்படங்களின் சுவாரஸ்ய தகவல்களை தொகுத்திருக்கிறார் கிருஷ்ணன் வெங்கடாசலம்.
‘சகுந்தலை’யில் ஆரம்பித்து ‘களத்தூர் கண்ணம்மா’ வரை விசாரணையும், பயணமுமாக போகிறார். அந்தந்த சினிமாவின் சிறு குறிப்பு, கதை, படம் தொடர்பான செய்தி, சுவாரஸ்யம் என நிரவி பரந்திருக்கிறது இந்தப் புத்தகம். எண்ணற்ற தகவல்கள். சினிமாவிற்கு வெளியே இருந்து கொண்டு இவ்வளவு தகவல்களைத் தொகுத்தளித்தது பெரிய சாதனை. இப்படங்களின் ஊடாகச் சென்று சந்தோஷப்பட்டவர்களுக்கும், இவை எதுவொன்றும் அறியாத புதிய தலைமுறைக்கும் சேர்ந்தே உபயோகமாகும் நூல். ‘ஹரிதாஸ், ஸ்ரீவள்ளி, வாழ்க்கை, மாயாபாஜார்’…. என வரிசையாக சுவாரஸ்யங்களை தெளித்துத் தருகிறார்.
வெகு சரளமாகக் கொண்டு சேர்க்கும் நடை. இதில் எல்லா ரசிகர்களுக்கும் வேண்டிய இடமும் உத்தரவாதமாக இருக்கிறது. நமக்குப் பிடித்த திரைப்படங்கள் பற்றிய விவரமான குறிப்புப் புத்தகம்.
நன்றி: குமுதம், 24/5/2017.