தேயிலைப் பூக்கள்
தேயிலைப் பூக்கள், சி. பன்னீர்செல்வம், அகரம், விலை 175ரூ.
கண்ணீராலும், வறுமையாலும், அவலங்களாலும், இயற்கை அல்லாத மரணங்களாலும் நிரம்பிய வாழ்க்கை இலங்கை மலையகத் தமிழர்களின் வாழ்க்கையாகும்.
அவர்களது வாழ்க்கையை எழுத்தாளர் சி. பன்னீர்செல்வம் புதுக்கவிதையில் காவியமாகப் படைத்துள்ளார். மலையக மக்கள் சிந்திய செந்நீரும், கண்ணீரும் நம் நெஞ்சில் சோக அலைகளை எழுப்புகிறது.
நன்றி: தினத்தந்தி, 31/5/2017.