இன்பியல் துன்பியல் இதழியல்

இன்பியல் துன்பியல் இதழியல், கோ.சீனிவாசன், அகரம், பக்.158, விலை ரூ.125. முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பணியாற்றிய நூலாசிரியர், செய்தி சேகரிப்பு சார்ந்த நிகழ்வுகளில் தனக்கு நேர்ந்த இன்பமானவற்றையும், துன்பமானவற்றையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். கூடவே இதழாளர்களுக்குப் பயன்படும் வகையில் அது குறித்த தனது அனுபவம் சார்ந்த கருத்துகளையும் கூறியிருக்கிறார். 1990 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தை செய்தி சேகரிக்கச் சென்றபோது நேரில் பார்க்க நேர்கிறது. அந்த காட்சிகள் அவரை நினைவிலும் கனவிலும் […]

Read more

தேயிலைப் பூக்கள்

தேயிலைப் பூக்கள், சி. பன்னீர்செல்வம், அகரம், விலை 175ரூ. கண்ணீராலும், வறுமையாலும், அவலங்களாலும், இயற்கை அல்லாத மரணங்களாலும் நிரம்பிய வாழ்க்கை இலங்கை மலையகத் தமிழர்களின் வாழ்க்கையாகும். அவர்களது வாழ்க்கையை எழுத்தாளர் சி. பன்னீர்செல்வம் புதுக்கவிதையில் காவியமாகப் படைத்துள்ளார். மலையக மக்கள் சிந்திய செந்நீரும், கண்ணீரும் நம் நெஞ்சில் சோக அலைகளை எழுப்புகிறது. நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

மனம் வரைந்த ஓவியம்

மனம் வரைந்த ஓவியம், பாவண்ணன், அகரம், மனை எண்1, நிர்மலா நகர், தஞ்சாவூர், பக். 224, விலை 150ரூ. பாவண்ணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை, மதிப்புரைகள் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். பெங்களூரூவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், சொந்த முயற்சியால் கன்னட மொழியைக் கற்றவர். கன்னட மொழியிலிருந்து முக்கியமான நூல்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். அதன் மூலம் மொழிபெயர்ப்புக்கான […]

Read more

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு, அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 360ரூ. முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இளமை வாழ்க்கை, திரைத்துறை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகிய 3 பிரிவுகளாக பிரித்து 119 தலைப்புகளில் ஆழ்ந்த சிந்தனைகள் அடங்கிய கவிதை தொகுப்பாக நூலாசிரியர் அழகிய பாண்டியன் தந்துள்ளார். அரிய புகைப்படங்ளையும் இடையிடையே சேர்த்திருப்பது புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. அண்ணல் பிறந்தார் அஹிம்சை பிறந்தது, புத்தர் பிறந்தார் அன்பு பிறந்தது, அன்னை தெரசா பிறந்தார் […]

Read more