வட்டாராதனை கதை உலகம்

வட்டாராதனை கதை உலகம், மூல கன்னட வடிவம்  சிவகோட்டாச்சார், நவீன கன்னட வடிவம்  ஆர்.எல். ஆனந்தராமய்யா, தமிழில் – தி.சு.சதாசிவம், பாவண்ணன், இறையடியான், சாகித்திய அகாதெமி பதிப்பகம், பக்.253, விலை ரூ.125. கன்னட மொழியின் முதல் உரைநடை நூல் என்ற பெருமைக்கு உரித்தானது இந்த நூல். மனித வாழ்வின் துன்பங்களைக் கடந்து கடுமையான நெறிகளின் பயனாக விண்ணுலகப் பேறு அடைந்த சமண துறவிகளின் வாழ்க்கையே வட்டாராதனை எனப்படுகிறது. இந்தக் கதைகள், பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. செய்யுள் வடிவில் […]

Read more

பிரயாணம்

பிரயாணம், பாவண்ணன், காலச்சுவடு,  பக்.216, விலை ரூ.190. பாவண்ணன் 1984இல் இருந்து எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறுகதைகளின் தொகுப்பு. நம்மைச் சுற்றி வாழ்கிற பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, மன உணர்வுகளை மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் நமக்குக் காட்டும் உலகு வித்தியாசமானது. நாம் அறிந்து கொள்ள வேண்டியது. வயதான காலத்தில் எந்த வருமானமும் இல்லாமல், எந்த ஆதரவும் இல்லாமல், ரெஜிஸ்டர் ஆபிஸில் யாருக்காவது சாட்சிக் கையெழுத்துப் போட்டு அதில் எப்போதாவது கிடைக்கும் சொற்பக் காசில் தன்னுடைய, தன் மனைவியினுடைய பசியைப் போக்கும் […]

Read more

மீசைக்காரப் பூனை

மீசைக்காரப் பூனை, பாவண்ணன், புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு தமிழ் சிறார் இலக்கியத்தில் பாடல்கள் பெரிதும் குறைந்துவிட்ட நிலையில், சமீபகாலமாகத் தொடர்ச்சியாகச் சிறார் பாடல்களை எழுதி வருகிறார் எழுத்தாளர் பாவண்ணன். அவருடைய புதிய சிறார் பாடல் தொகுப்பு இது. ரயிலில் சந்தித்த சிறார்கள் பேசிய கதையின் உந்துதலால் இப்பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

யானை சவாரி

யானை சவாரி, பாவண்ணன், புக்ஸ் பார் சில்ரன், பக். 64, விலை 40ரூ. தீவிர புனைகதை எழுத்துகளின், மொழிபெயர்ப்பாளரான பாவண்ணனின், குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு இது. பொதுவாக, பெரும்பாலான குழந்தை பாடல்கள், பெரியவர்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றும். அவை குழந்தைகளுக்கு அன்னியமாகவே இருக்கும். இந்த நூலில், குழந்தைகள் வாசிக்கும் வகையில், எளிய மொழியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இவற்றில் போதையும் இல்லை; போதனைகளும் இல்லை. குழந்தைகளைப்போல், குழந்தையாகவே இருக்கின்றன. எளிய மொழியும், எளிய காட்சிகளும் அடங்கி உள்ளன. பாடல்களில் இருந்து குழந்தைகளுக்கான இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் பெற்றோர், […]

Read more

மனம் வரைந்த ஓவியம்

மனம் வரைந்த ஓவியம், பாவண்ணன், அகரம், மனை எண்1, நிர்மலா நகர், தஞ்சாவூர், பக். 224, விலை 150ரூ. பாவண்ணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை, மதிப்புரைகள் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். பெங்களூரூவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், சொந்த முயற்சியால் கன்னட மொழியைக் கற்றவர். கன்னட மொழியிலிருந்து முக்கியமான நூல்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். அதன் மூலம் மொழிபெயர்ப்புக்கான […]

Read more