கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை, பிரியசகி, புக்ஸ் பார் சில்ரன், விலை 160ரூ. நமது வாழ்வின் ஆதாரம் கல்வியே. குழந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் புதிய கல்விச் சிந்தனைகளை எளிய தமிழில் ஆசிரியர் பிரியசகி விளக்கியுள்ளார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள நூல். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026650.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

மந்திரவாதி மன்னர்

மந்திரவாதி மன்னர், தமிழில் சரவணன் பார்த்தசாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 24, விலை 45ரூ. வண்ணப் படங்களால் நிறைந்துள்ள இந்த நூலில், மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி ஆகிய இரண்டு கதைகள் உள்ளன. சோவியத் கதை வரிசையில் இன்னுமொரு நூல். சோவியத் ஓவியர்களால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள், நூலுக்கு கூடுதல் அழகூட்டுகின்றன. குழந்தைகளை கவரும் வடிவமைப்பும் அழகு!. நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

வீரம் விளைந்தது

வீரம் விளைந்தது, தமிழில் ஆதி வள்ளியப்பன், புக்ஸ் பார் சில்ரன், விலை 50ரூ. உலகமெங்கும் சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோருக்கு உத்வேகம் அளிக்கும் உன்னதப் படைப்பு, ‘வீரம் விளைந்தது’. இந்த ரஷிய நாவல், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாடகமாகவும், திரைப்படமாகவும் வடிவம் பெற்றிருக்கிறது. அதைத்தான் அழகு தமிழில் மறுஆக்கம் செய்திருக்கிறார் ஆசிரியர் ஆதி வள்ளியப்பன். இந்நாவலின் நாயகனான பாவெல் கர்ச்சாகின், சகாப்தம் படைத்தவன். நூலை எழுதிய ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வாழ்க்கையும் பணிகளுமே நாயகனுடையதாகக் கூறப்பட்டுள்ளன. அதனால் நாயகனின் புரட்சிப் பயணத்தில் நாமும் […]

Read more

ஆமை காட்டிய அற்புத உலகம்

ஆமை காட்டிய அற்புத உலகம், யெஸ். பாலபாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 80, விலை 60ரூ. சிறார் நாவல் உலகில் ஓரு புதிய வரவு, ‘ஆமை காட்டிய அற்புத உலகம்.’ ஜூஜோ என்ற ஆமையுடன் சிறுவர்கள் மேற்கொள்ளும் ஒரு சாகசப் பயணத்தை விவரிப்பதுதான் இந்த நாவல். சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் எப்போதும் வசீகரிப்பது கடல். கடலும் அதன் அற்புதங்களும் கேட்கச் சலிக்காதவை. அத்தகைய விரிவானதொரு பின்புலத்தில் கடலுக்குள்ளே சென்று நாமே பார்க்கிற நேரடி அனுபவத்தைத் தருகிறது இந்நாவல். கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் வாழ்க்கை […]

Read more

தமிழன் தொடுத்த போர்

தமிழன் தொடுத்த போர், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை, விலை 80ரூ. 1965-ம் ஆண்டில், பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். அதை இளைய தலைமுறையினர் நன்கு அறிவார்கள். இதற்கு முன், 1938ல் நடந்ததுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போராட்டம். இதற்கு ஈ.வெ.ரா. பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைமை தாங்கினார்கள். தாளமுத்து, நடராசன் என்ற இரு தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அப்போராட்டத்தின் முழு விவரங்களையும் பேராசிரியர் மா. இளஞ்செழியன் எழுதியுள்ளார். அந்த நூலை, […]

Read more

யானை சவாரி

யானை சவாரி, பாவண்ணன், புக்ஸ் பார் சில்ரன், பக். 64, விலை 40ரூ. தீவிர புனைகதை எழுத்துகளின், மொழிபெயர்ப்பாளரான பாவண்ணனின், குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு இது. பொதுவாக, பெரும்பாலான குழந்தை பாடல்கள், பெரியவர்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றும். அவை குழந்தைகளுக்கு அன்னியமாகவே இருக்கும். இந்த நூலில், குழந்தைகள் வாசிக்கும் வகையில், எளிய மொழியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இவற்றில் போதையும் இல்லை; போதனைகளும் இல்லை. குழந்தைகளைப்போல், குழந்தையாகவே இருக்கின்றன. எளிய மொழியும், எளிய காட்சிகளும் அடங்கி உள்ளன. பாடல்களில் இருந்து குழந்தைகளுக்கான இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் பெற்றோர், […]

Read more

இது யாருடைய வகுப்பறை?

இது யாருடைய வகுப்பறை?, ஆயிஷா ரா. நடராசன், புக்ஸ் பார் சில்ரன், பக். 248, விலை 150ரூ. கவனத்தை ஈர்க்கும் தலைப்புடைய இந்நூல், கல்வி, ஆசிரியர், சமூகம் என பல தளங்களின் கலைக் களஞ்சியம் போல் அமைந்துள்ளது. இந்தியக் குழந்தைகளுக்கான கல்வி உளவியல், கற்றல் கோட்பாடுகளை நாம் தேடிக் காண வேண்டாமா? மனிதர்களை உருவாக்கும் வகுப்பறைகளை நக்கி, நம் கவனம் மெல்லத் திரும்ப வேண்டாமா? எப்படியாவது வெற்றி என்ற இலக்கை நோக்கி, பிள்ளைகளை மந்தைகளாய் துரத்தும், பண்பாட்டுச் சிதைவைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இத்தகைய […]

Read more