தமிழன் தொடுத்த போர்
தமிழன் தொடுத்த போர், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை, விலை 80ரூ.
1965-ம் ஆண்டில், பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். அதை இளைய தலைமுறையினர் நன்கு அறிவார்கள். இதற்கு முன், 1938ல் நடந்ததுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போராட்டம். இதற்கு ஈ.வெ.ரா. பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைமை தாங்கினார்கள். தாளமுத்து, நடராசன் என்ற இரு தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அப்போராட்டத்தின் முழு விவரங்களையும் பேராசிரியர் மா. இளஞ்செழியன் எழுதியுள்ளார். அந்த நூலை, இப்போது நவீன வடிவமைப்புடன் குறைந்த விலையில் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 18/3/2015.
—-
உலகத் தொழில் நுட்ப முன்னோடிகள், இரா. நடராசன், புக்ஸ் பார் சில்ரன், சென்னை, விலை 35ரூ.
தன்னுடைய தொழில் நுட்பத்தால் உயர்த்திய 12 அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கருத்துக்களை கொண்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.