வியப்பின் மறுபெயர் வீரமணி

வியப்பின் மறுபெயர் வீரமணி, மஞ்சை வசந்தன், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 250ரூ. திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். ஒரு காவிய நாயகரின் வரலாற்றை, காவியமாகவே படைத்திருக்கிறார் மஞ்சை வசந்தன். புத்தகத்தை கையில் எடுத்தால், கீழே வைக்க மணம் வராது. அந்த அளவுக்கு சுவை, விறுவிறுப்பு. புத்தகத்தில் உள்ள மறக்க முடியாத சில தவல்கள் பிறந்து 11 மாதமே ஆகி இருந்த நிலையில் வீரமணியின் தாயார் மறைந்தார். அதன் பின் சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் சாரங்கபாணி. […]

Read more

என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்

என் வரித்துறைப் பயணமும் வாழ்வும், ஆங்கில மூலம் ச.இராஜரத்தினம், தமிழில் ப.காளிமுத்து, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பக்.560, விலை ரூ.600. விருதுநகரில் சாதாரண பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நூலாசிரியர், தனது கடின உழைப்பால் இந்திய வருவாய்த்துறையில் ஆணையராகப் பணிபுரிந்தவர். பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்தவர். எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் நேர்மையாகப் பணிபுரிந்தவர். பல பணியிட மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டவர். வரி ஏய்ப்புச் செய்பவர்களின் பல தந்திரங்களைத் தெரிந்து கொண்டு, அவர்களை வரி செலுத்தச் செய்ய நூலாசிரியர் செய்த பல முயற்சிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள்

திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 40ரூ. திராவிடர் இயக்க வரலாறு நூற்றாண்டுகளைக் கொண்டது. இதன் வரலாறு குறித்தும், இந்த இயக்கம் செய்த சாதனைகள் பற்றியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொருவரின் இன்றைய இனிய வாழ்க்கைக்கு திராவிடர் இயக்கமே காரணம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். மேலும் பின்னிணைப்பாக, திராவிடர் சங்கம் தோன்றிய வரலாறு, நீதிக்கட்சி காலத்தில் சமூக நீதி ஆணைகள், சமூக சீர்திருத்த ஆணைகள் நூலுக்கு மேலும் […]

Read more

தமிழன் தொடுத்த போர்

தமிழன் தொடுத்த போர், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை, விலை 80ரூ. 1965-ம் ஆண்டில், பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். அதை இளைய தலைமுறையினர் நன்கு அறிவார்கள். இதற்கு முன், 1938ல் நடந்ததுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போராட்டம். இதற்கு ஈ.வெ.ரா. பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைமை தாங்கினார்கள். தாளமுத்து, நடராசன் என்ற இரு தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அப்போராட்டத்தின் முழு விவரங்களையும் பேராசிரியர் மா. இளஞ்செழியன் எழுதியுள்ளார். அந்த நூலை, […]

Read more