முயற்சியே முன்னேற்றம்
முயற்சியே முன்னேற்றம், மெர்வின், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் நூல்களை எழுதுவதில் புகழ்பெற்ற மெர்வின் எழுதிய புத்தகம் இது. “முயற்சி திருவினையாக்கும்” என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இப்புத்தகத்தின் விலை 60ரூ. “உழைப்போம் உயர்வோம்” விலை 80ரூ. உயர்வு தரும் உன்னத சம்பவங்கள் விலை 70ரூ ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். மூன்று புத்தகங்களையும் வெளியிட்டோர் குமரன் பதிப்பகம். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.
—-
அனைத்து நோய்களுக்கும் யோகாகசன மருத்துவம், ஜவ்வை இஜெட், முஜீப் இந்தியா கிரியேசன், சென்னை, விலை 99ரூ.
எந்த நோய் வந்தாலும் அதற்கு மருத்துவமாய் யோகாசனத்தை சிகிச்சையாய் எடுத்துக்கொள்ள முடியும் என்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.
—-
மனிதர்கள் தாவரங்கள் ஆச்சரியமான ஒப்பீடுகள், கே. மாரியப்பன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 50ரூ.
அறிவியல் ஆய்வுக்கு உட்பட்ட இந்த நூலின் தாவரங்கள் மற்றும் மனிதர்களின் வளர்ச்சி, செயல்பாடுகள், பயன்கள் குறித்து 3 தலைப்புகளில் அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ள நூலாகும். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.