வீரம் விளைந்தது
வீரம் விளைந்தது, தமிழில் ஆதி வள்ளியப்பன், புக்ஸ் பார் சில்ரன், விலை 50ரூ.
உலகமெங்கும் சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோருக்கு உத்வேகம் அளிக்கும் உன்னதப் படைப்பு, ‘வீரம் விளைந்தது’. இந்த ரஷிய நாவல், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நாடகமாகவும், திரைப்படமாகவும் வடிவம் பெற்றிருக்கிறது. அதைத்தான் அழகு தமிழில் மறுஆக்கம் செய்திருக்கிறார் ஆசிரியர் ஆதி வள்ளியப்பன். இந்நாவலின் நாயகனான பாவெல் கர்ச்சாகின், சகாப்தம் படைத்தவன்.
நூலை எழுதிய ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வாழ்க்கையும் பணிகளுமே நாயகனுடையதாகக் கூறப்பட்டுள்ளன. அதனால் நாயகனின் புரட்சிப் பயணத்தில் நாமும் கூடவே நடக்கும் ஓர் உணர்வு. அவனுக்காக நாமும் வருந்தி, வியந்து, சிலிர்த்து, நெகிழ்ந்து போகிறோம். எளிய, இனிய நடையும், பொருத்தமான படங்களும் நம்மை வாசிக்கத் தூண்டுகின்றன.
நன்றி: தினத்தந்தி, 3/5/2017.