லீ குவான் யூ
லீ குவான் யூ, பெருந்தலைவன், பி.எஸ்.ராஜகோபாலன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ.
சிங்கப்பூரின் பெருந்தலைவர் லீ குவான் யூவின் வரலாறு. இன்றைய தேதியில் உலகத்திலேயே எல்லோரும் விரும்பும், பயணப்படும் நாடும் அதுதான். இந்த மாற்றத்துக்காக லீ பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. கண்டிப்பு, தாராளம், உறுதி என்ற விசித்திர கலவையில் நாட்டை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இன்றைக்கும் பூமியின் சொர்க்கமாக சிங்கப்பூரையே சுட்டுகிறார்கள். எதையும் துணிந்து செய்வதற்கும், மறுமலர்ச்சி கொண்டு வருவதற்கும் ஒரு தலைவன் வேண்டும். அதற்கு அவனே தூய்மையாக இருத்தல் அவசியம். அப்படியிருந்து சிங்கப்பூரைக் கொண்டு வந்தவரின் வரலாற்றை ராஜகோபாலன் சரளமாக எடுத்துரைக்கிறார்.
இளைய தலைமுறைக்கு அவசியமான புத்தகம். ஒரு தலைவன் உருவாகிற வழியை ராஜகோபாலன் எடுத்துரைக்கிற நேர்த்தி, சலிப்பு வராது கொண்டு சேர்க்கிற நடை என கூடுதல் அழகு. அதற்கான அவரின் உழைப்பு நூல் முழுவதும் பரவிக் கிடைக்கிறது. லீயின் ஆரம்ப வாழ்க்கை தொடங்கி, தமிழர்கள் மீது அவருக்கு இருந்த தீராத அன்புவரைக்கும் பதில் தருகிறது இந்தப் புத்தகம். படித்தாலும் அருமை, கையில் இருந்தாலும் பெருமை.
நன்றி: குங்குமம், 28/4/2017.