யானை சவாரி

யானை சவாரி, பாவண்ணன், புக்ஸ் பார் சில்ரன், பக். 64, விலை 40ரூ. தீவிர புனைகதை எழுத்துகளின், மொழிபெயர்ப்பாளரான பாவண்ணனின், குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு இது. பொதுவாக, பெரும்பாலான குழந்தை பாடல்கள், பெரியவர்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றும். அவை குழந்தைகளுக்கு அன்னியமாகவே இருக்கும். இந்த நூலில், குழந்தைகள் வாசிக்கும் வகையில், எளிய மொழியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இவற்றில் போதையும் இல்லை; போதனைகளும் இல்லை. குழந்தைகளைப்போல், குழந்தையாகவே இருக்கின்றன. எளிய மொழியும், எளிய காட்சிகளும் அடங்கி உள்ளன. பாடல்களில் இருந்து குழந்தைகளுக்கான இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் பெற்றோர், […]

Read more

உச்சிமுகர்

உச்சிமுகர், குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்கள், விழியன், புக்ஸ் பார் சில்ட்ரன் வெளியீடு, பாரதி புத்தகாலயம், சென்னை. குழந்தைகளுக்காக கதைகள் எழுதிவரும் விழியன் தன் குட்டி மகளுடன் நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதியிருப்பதே உச்சி முகர் என்ற இந்நூல். குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்களை எழுத்தின் மூலம் அவர் வாழ்ந்து பார்க்கிறார். இதை வாசிக்கும் ஒவ்வொரு தகப்பனும் தாயும் தங்கள் குழந்தைகளுடனான மெல்லிய தருணங்களை நினைவுகூர்வார்கள் என்பதே இதன் வெற்றி. தந்தை விழியனுக்கும் குழந்தை குழலிக்கும் இடையிலான தருணங்கள்தான் எத்தனை அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. குழலி […]

Read more

உபரி வடைகளின் நகரம்

உபரி வடைகளின் நகரம், லிபி ஆரண்யா, சந்தியா பதிப்பகம், (சிறந்த கவிதைத் தொகுப்பு). அரசியலும் அழகியலும் கவிதையில் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளாத இணைகோடுகள் என்ற விமர்சனத்தை வீறுகொண்டு உடைக்கிறது லிபி ஆரண்யாவின் கவிதைகள். விஞ்ஞானத்தால் நிலத்தின் மீது நிகழும் வன்முறையை, குழந்தைகளின் திறமைகளைக் கொன்றுவிட்டு அவர்களை மனப்பாட பொம்மைகளாக்கும் கல்விமுறையை, நமது தேசிய வியாதியாகிவிட்ட நீரிழிவு நோய்க்கும் அந்நிய மோகத்துக்கும் குறிப்பாக, அமெரிக்க மோகத்துக்கும் இடையிலான அரசியலை, அகவிலைப்படி உயர்வுக்கும் மதுரை வடக்கு மாசி வீதி டாஸ்மாக் வாசிலில் ஒருவன் எடுக்கும் வாந்திக்கும் இடையிலான காரணங்களையும் […]

Read more