இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள்

இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள், யசோதரை கருணாகரன், ஆனந்த விகடன், விலை 165ரூ. இதயத்தைக் காக்கும் உணவுகள் என்ற தலைப்பில், பல்வேறு உணவுகள் பாரம்பரிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் வகைகளை இதில் காணலாம். கொள்ளு ரசப்பொடி, முடக்கத்தான் இட்லி, இலந்தை வடை என்று பல ரெசிபிகள் இதில் அடக்கம். இந்த மூன்று நூல்களையும் வெளியிட்டு உணவுத் தயாரிப்பின் சிறப்பை ஆனந்த விகடன் பிரசுரம் வெளிப்படுத்தியிருக்கிறது. நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

மருந்தென வேண்டாவாம்

மருந்தென வேண்டாவாம், மருத்துவர் சி.எஸ். சிவராமன், ஆனந்த விகடன், விலை 115ரூ. சுக்கு, வெந்தயம், மஞ்சள், சீரகம் உட்பட நமது பண்டைய கால சமையல் உணவுக்கான பொருட்கள் எந்த அளவு உடலின் சமநிலைக்கு உதவுகிறது என்பதை விளக்கும் நூல். அறுசுவை உணவு வாழ்வைச் சிறக்க வைக்கும் என்பதும் இந்த நூலில் கூறப்படும் கருத்தாகும். நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை, seed அறக்கட்டளை, ஆனந்த விகடன், விலை 185ரூ. திருநெல்வேலியில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் சமையல் கலையில் தேர்ந்தவர்கள் தயாரித்த உணவு வகைகள் தயாரிப்புகள் தரப்பட்டுள்ளன. வழுவழு தாளில், வண்ண உணவுகள் தயாரிப்பும் இந்த நூலின் தனிச்சிறப்பு. நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல்

கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல், மன்னர்மன்னன், முத்துப் பதிப்பகம், விழுப்புரம், பக், 484. பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு அந்த நூலின் இருந்து சில பகுதிகள் இளமை காலத்தில் ஏற்பட்ட வறுமை நிலை ஒன்றை இப்படிச் சொல்வார் பாவேந்தர்- கூனிச்சம்பட்டு என்ற சிற்றூரில் நான் ஆசிரியராகப் பணிபுரியப் போனேன். அந்த ஊருக்குப் போவதற்கு முன்பே என்னைப் பற்றிய கீர்த்தி எட்டிவிட்டது போலும். புதுவையின் அரசியல் கட்சிக்காரர்கள், என்னைப் பற்றி ஒரு வரலாற்றைக் கூறி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் வேலை செய்யும் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் என்னிடம் […]

Read more

உபரி வடைகளின் நகரம்

உபரி வடைகளின் நகரம், லிபி ஆரண்யா, சந்தியா பதிப்பகம், (சிறந்த கவிதைத் தொகுப்பு). அரசியலும் அழகியலும் கவிதையில் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளாத இணைகோடுகள் என்ற விமர்சனத்தை வீறுகொண்டு உடைக்கிறது லிபி ஆரண்யாவின் கவிதைகள். விஞ்ஞானத்தால் நிலத்தின் மீது நிகழும் வன்முறையை, குழந்தைகளின் திறமைகளைக் கொன்றுவிட்டு அவர்களை மனப்பாட பொம்மைகளாக்கும் கல்விமுறையை, நமது தேசிய வியாதியாகிவிட்ட நீரிழிவு நோய்க்கும் அந்நிய மோகத்துக்கும் குறிப்பாக, அமெரிக்க மோகத்துக்கும் இடையிலான அரசியலை, அகவிலைப்படி உயர்வுக்கும் மதுரை வடக்கு மாசி வீதி டாஸ்மாக் வாசிலில் ஒருவன் எடுக்கும் வாந்திக்கும் இடையிலான காரணங்களையும் […]

Read more

ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம்,(சிறந்த மொழிபெயர்ப்பு புனைவு), சி. மோகன், அதிர்வு பதிப்பகம். மாவோ தலைமையில் சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து அங்கு அழிந்துபோன அல்லது அழித்தொழிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களின் தொன்மையை, நாகரிகத்தை, அவை அழித்தொழிக்கப்பட்ட வன்முறையைப் பேசும் வரலாற்று ஆவணம் ஓநாய் குலச்சின்னம். 2004ம் ஆண்டு வெளியாகி Wolf Totem என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. நாவலின் ஆசிரியர் ஜியாங் ரோங், சீனாவின் ஜியாங்சூவில் பிறந்தவர். வெளியான இரண்டே ஆண்டுகளில் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையான இந்த நாவல், மங்கோலிய மேய்ச்சல் நில […]

Read more

ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில் சி. மோகன், அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர், விருகம்பாக்கம், சென்னை 93, பக்கங்கள் 672, விலை 500ரூ. சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியை மட்டுமே நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாகத் தொன்மை வாய்ந்த மங்கோலிய மேய்ச்சல் புல் நிலம் என்ன ஆனது என்பதன் வரலாற்றுப் புனைவே இந்த நாவல். மங்கோலிய மேய்ச்சல்காரர்களுக்குப் புல்தான்… நாய், ஆடு, மாடு, குதிரைகளைவிடப் பெரிய உயிர். இரக்கத்துக்கு உரிய உயிர். புல்லை மேயும் மான்கள் அவர்களைப் பொறுத்தவரையில் […]

Read more

அஞ்ஞாடி

அஞ்ஞாடி, பூமணி, பக்கங்கள் 1066, வெளியீடு: க்ரியா, பி-37, கிரவுண்ட் ஃப்ளோர், 5வது குறுக்குத் தெரு, யுனிவர்சிட்டி காலனி, பாலவாக்கம், சென்னை – 41. விலை ரூ. 925 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-208-0.html தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் வரிசையில், கம்பீரமான ஓர் ஆசனத்தைப் பூமணிக்குத் தந்து இருக்கிறது ‘அஞ்ஞாடி’. ஆண்டி, மாரி என்ற இருவர் இடையே முகிழும் நட்பு தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கதை… அதனூடே கடக்கும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்… இவைதான் ‘அஞ்ஞாடி’. […]

Read more