மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை

மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை, பேரா.சோ.மோகனா, பாரதி புத்தகாலயம், விலை: ரூ.120. போராட்டமே வாழ்க்கை ஆணுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிற அனைத் தையும் பெண் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. பேராசிரியர் மோகனாவும் போராடித்தான் வென்றிருக்கிறார். கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவருக்குக் கல்வி பெறுவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. தன்னை மூழ்கடிக்க முயன்ற ஒவ்வொரு சவாலையும் துணிவோடு எதிர்கொண்டு களமாடினார். அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம், பெண்கள் இயக்கம், தொழிற்சங்கம் என்று பல்வேறு அமைப்புகளில் பங்கேற்றுக் களப்பணியாற்றிவர், புற்றுநோயிலிருந்தும் போராடி மீண்டார். தான் கடந்துவந்த […]

Read more

உபரி வடைகளின் நகரம்

உபரி வடைகளின் நகரம், லிபி ஆரண்யா, சந்தியா பதிப்பகம், (சிறந்த கவிதைத் தொகுப்பு). அரசியலும் அழகியலும் கவிதையில் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளாத இணைகோடுகள் என்ற விமர்சனத்தை வீறுகொண்டு உடைக்கிறது லிபி ஆரண்யாவின் கவிதைகள். விஞ்ஞானத்தால் நிலத்தின் மீது நிகழும் வன்முறையை, குழந்தைகளின் திறமைகளைக் கொன்றுவிட்டு அவர்களை மனப்பாட பொம்மைகளாக்கும் கல்விமுறையை, நமது தேசிய வியாதியாகிவிட்ட நீரிழிவு நோய்க்கும் அந்நிய மோகத்துக்கும் குறிப்பாக, அமெரிக்க மோகத்துக்கும் இடையிலான அரசியலை, அகவிலைப்படி உயர்வுக்கும் மதுரை வடக்கு மாசி வீதி டாஸ்மாக் வாசிலில் ஒருவன் எடுக்கும் வாந்திக்கும் இடையிலான காரணங்களையும் […]

Read more