யானை சவாரி

யானை சவாரி, பாவண்ணன், புக்ஸ் பார் சில்ரன், பக். 64, விலை 40ரூ.

தீவிர புனைகதை எழுத்துகளின், மொழிபெயர்ப்பாளரான பாவண்ணனின், குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு இது. பொதுவாக, பெரும்பாலான குழந்தை பாடல்கள், பெரியவர்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றும். அவை குழந்தைகளுக்கு அன்னியமாகவே இருக்கும். இந்த நூலில், குழந்தைகள் வாசிக்கும் வகையில், எளிய மொழியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இவற்றில் போதையும் இல்லை; போதனைகளும் இல்லை. குழந்தைகளைப்போல், குழந்தையாகவே இருக்கின்றன. எளிய மொழியும், எளிய காட்சிகளும் அடங்கி உள்ளன. பாடல்களில் இருந்து குழந்தைகளுக்கான இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் பெற்றோர், இந்த நூலை பரிசீலனையில் எடுத்துக்கொள்ளலாம். நன்றி: தினமலர், 21/1/2015.  

—-

டாலும் ழீயும், விழியன், புக்ஸ் பார் சில்ரன், பக். 32, விலை 25ரூ.

குழந்தைகளுக்கான ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு இது. டால்பின்புரத்தில் வசிக்கும் டால்-க்கும், மீசையூரில் வசிக்கும் ழீ-க்குமான சந்திப்பில் நடக்கும் கதைகளின் தொகுப்பு இந்த புத்தகம். டால் என்றால் டால்பியன். ழீ என்றால் தங்கமீன். அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் சிறுகதையாக எழுதப்பட்டு உள்ளன. சிறுகதைகள் தனித்தனியாக இருந்தாலும், மொத்தமாக வாசிக்கும்போது, சிறிய நாவல்போல் உள்ளது. கதைக்களமும், அதன் பெயர்களும், சம்பவங்களும், குழந்தைகள்ளுக்கானதாகவே உள்ளன. வார்த்தைகளில் தெரியும் புதிய உலகத்தை, ஓவியங்கள் முன் நிறுத்துகின்றன. நன்றி: தினமலர், 14/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *