எருது
எருது, கார்த்திகை பாண்டியன், எதிர் வெளியீடு.
மொழிபெயர்ப்பு நாவல்கள் பயனுள்ளவையா? கார்த்திகை பாண்டியன் எழுதிய எருது நாவலை சமீபத்தில் வெளியிட்டோம். இந்த நாவல், மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக அறியப்பட்டு, தமிழுக்கு அறிமுகம் ஆகாமல் உள்ள நாவல்களின் தொகுப்பு. தென் அமெரிக்கா, ஐரேபாப்பா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பிரபல எழுத்தாளர்கள் ஆங்கிலம் மற்றும் அவரவர் மொழிகளில் எழுதியவை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. சீன எழுத்தாளர் மோயான் எழுதிய எருது என்ற நாவலின் பெயரையே, இந்த நாவலுக்கும் சூட்டியுள்ளார் ஆசிரியர். எருது நோபல் பரிசு பெற்ற நாவல். அப்பா மகன் இருவருக்கும் அவரவர் தலைமுறையில் ஏற்படும் பிரச்னைகளை, எப்படி பார்க்கின்றனர். அதைத் தீர்க்க எப்படி அணுகுகின்றனர் என்பதை எருது நாவல் சொல்கிறது. பிரச்னைகளை அணுகுவதில், இருவரும் எப்படி இருக்கின்றனர் என்பதை மிக அற்புதமாக நாவல் விவரிக்கிறது. ஒரே நேரத்தில் இருவேறு தலைமுறையை சேர்ந்தவர்கள், தங்கள் அனுபவம் மூலம், பிரச்னைகளை எப்படி சந்திக்கின்றனர் என்பதை, தற்போதைய தலைமுறை அறிந்துகொள்ளவது, சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். அமெரிக்காவைச் சார்ந்த எழுத்தாளர் அம்புரோஸ் பியர்ஸ், எழுதிய சட்டம் இடப்பட்ட சாளரம் நாவல், ஒரு தனி மனிதனின் கல்லறையை நோக்கிய பயணத்தை சொல்கிறது. மனிதனின் தனிமை, அதை அமைத்துக் கொள்ள அவன் என்னென்ன செய்கிறான் என்பதே நாவலின் முக்கியப் பகுதி. மேற்கத்திய நாடுகளின் பிரபல எழுத்தாளர்கள், ஒரு சிலரின் நாவல்களை மட்டும் படித்துவிட்டு, அந்த நாடுகளைப் பற்றிய, பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்தி வைத்துள்ளோம். இதைத் தகர்த்து, அந்த நாடுகளின் யதார்த்த நிலையை, இதுபோன்ற எழுத்தாளர்கள் நமக்கு உணர்த்துகின்றனர். குறிப்பாக மேலைநாடுகளின் கலாசார முறை குறித்து, நமக்குள் இருக்கும் ஒரு வடிவத்தையே எருது போன்ற மொழிபெயர்ப்பு நாவல்கள் மாற்றுகின்றன. மேற்கத்திய எழுத்தாளர்களில் இதுவரை தமிழில் அறியப்படாதவர்களை, தமிழுக்கு கொண்டு வருவதன் மூலம் அவர்களின் பிற படைப்புகளையும் நாடி வாசகர்கள் செல்வார்கள். அதன்மூலம், உண்மையான உலகை அறிந்துகொள்ள முடியும். மாறிவரும் கலாசாரத்தில், மொழிபெயர்ப்பு நாவல்களின் பங்கு மிக முக்கியம். -அனுஷ். எதிர்வெளியீடு பதிப்பகம். நன்றி: தினமலர், 19/1/2015