பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு

பாரதத்தின் பேரரசி சாதனை வரலாறு, அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 360ரூ. முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இளமை வாழ்க்கை, திரைத்துறை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகிய 3 பிரிவுகளாக பிரித்து 119 தலைப்புகளில் ஆழ்ந்த சிந்தனைகள் அடங்கிய கவிதை தொகுப்பாக நூலாசிரியர் அழகிய பாண்டியன் தந்துள்ளார். அரிய புகைப்படங்ளையும் இடையிடையே சேர்த்திருப்பது புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. அண்ணல் பிறந்தார் அஹிம்சை பிறந்தது, புத்தர் பிறந்தார் அன்பு பிறந்தது, அன்னை தெரசா பிறந்தார் கருணை பிறந்தது, புரட்சித்தலைவி பிறந்தார் இவை அனைத்தும் பிறந்தன. இதுபோன்ற கவிதை வரிகளும், நாட்டிலேயே தமிழகத்தில் முதல் முறையாக ஜெயலலிதா தொடங்கிய மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் குறித்து, அமெரிக்கா நியூயார்க் நகரில் உள்ள ஜான் ஜே. காலேஜ் ஆப் கிரிமினல் ஜஸ்டிஸ் என்ற கல்லூரியில் பாடதிட்டத்தில் இருக்கும் பல்வேறு வரலாற்றுச் செய்தியும் கவிதை வடிவில் நூலாசிரியர் தெரிவித்துள்ளார். படிக்க, ரசிக்க, பாதுகாக்க ஏற்ற நூல்.  

—-

 

கிண்ணம் நிரப்பு, கவிஞர் நீலமணி, சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 110ரூ

அழகான வர்ணனைகளும், ஆழமான கருத்துக்களும் நிறைந்த நூல். உவமைக் கவிஞர் சுரதாவைப்போல் நூலாசிரியர் கவிஞர் நீலமணியிடமும் உவமைகள் கொஞ்சி விளையாடுகின்றன.  

—-

 

பூமழைத்துளிகள், அணைக்குடி சு. சம்பத், அகரம், 1. நிர்மலா நகர், தஞ்சாவூர் 7, விலை 50ரூ.

குழந்தைகள் மனதில் சமூக சீர்திருத்த கருத்துக்களை விதைக்கும் வகையிலும், நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ளும் விதமாகவும் கவிதை நடையில் குழந்தைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளின் மனநிலையுடன் ஒன்றியவாறு அவர்களின் வாழ்வியலுக்கு தேவையான தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் நீதி கருத்துக்களையும் நூலாசிரியர் பாடல்களில் புனைந்துள்ளார். அவர் பள்ளி ஆசிரியராக இருப்பதால் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தூண்டுகோலாய், பாடல்களில் அறிவுரைகளை கலந்து எளிய தமிழில் வடித்திருப்பது சிறப்பம்சம். நன்றி: தினத்தந்தி 8/5/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *