அத்தையின் அருள்
அத்தையின் அருள், சு. வெங்கடசுப்ராய நாயக்கர், கண்ணம்மா பதிப்பகம், 144, மகாலட்சுமி இல்லம், பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி, பக். 100, விலை 70ரூ.
அப்பாவைக் காட்டிலும மாமாவின்பேரில்தான் குழந்தைகளுக்கு பிரியம் அதிகம். அப்பாவின் உடன்பிறந்த அத்தை பேரிலும் ஒரு அலாதிப் பிரியம் ஏற்படும். அதிலும் சிறுபிள்ளையாய், தாயை இழந்துவிட்ட குழந்தைகளுக்கு அப்பத்தை பேரில் சொல்லவொண்ணாப் பிரயம் சகஜமே என்று கி.ராஜநாராயணன் கொடுத்திருக்கும் முன்னுரையே இந்நூல் பற்றிய விளக்கமாக அமைந்துவிடுகிறது. இந்நூலை யாரோ ஒருவன் தன் அத்தையைப் பற்றி எழுதியிருப்பதாக சாதாரணமாக நினைக்க முடியாது. ஒரு அத்தையை மையமாக வைத்து தமிழ்ப்பண்பாட்டுச் சூழலையே நம் கண்முன் கொணர்கிறார் ஆசிரயர். உறவுகள், தியாகங்கள், உதவும்குணம், அரவணைப்பு, இன்னும் வட்டார வழக்கு, நாட்டு நடப்பு, அரசியல் விமர்சனம், பழக்க வழக்கம் என்று அவ்வளவும் படிக்காத அத்தையிடம் இருந்து இந்த தமிழ்பூமி சுற்றிவருவதை இவ்வளவு எளிமையாக அழகாக யாரும் இதற்குமுன் எடுத்துவைத்ததில்லை. நன்றி: குமுதம், 15/5/2013.
—-
இறையனார் அகப்பொருள், சாந்தா பப்ளிஷர்ஸ், 13(5) ஸ்ரீபுரம், 2வது தெரு, இராயப்பேட்டை, சென்னை 14, விலை 100ரூ.
இறையனார் அகப்பொருள், 60 நூற்பாக்களைக் கொண்டது. இவற்றுள் முதல் 33 களவு பற்றியதாகும். ஏனைய 27 கற்பு பற்றியதாகும். பொருள் இரு திணைகளை அடக்கியது. அகம், புறம் என்பன அவை. அகம் அடக்கும் புரிவு, கைகோள், இதனைக் களவு, வரைவு, கற்பு என மூன்றாகக் குறிக்கிறது. பிற்காலத்தெழுந்த நம்பியகப்பொருள் தொல்பாக்கியம், களவியல், கற்பியல் என இரண்டினையே கொண்டுள்ளது. அவ்விலக்கணம் தழுவிய வழி நூலாக இந்நூல் விளங்குகிறது. தெய்வப்புலமை நக்கீரனார் அருளிய இறையனார் களவியல் உரை தகவல் செழுமையாலும் சொல் விளக்கத்தாலும் தொடர்பு சிறப்பாலும் தன்னிகரற்றுத் திகழ்வதைப் படிப்போர் உணர்வர். நன்றி: தினத்தந்தி, 8/5/2013.