அன்பே சிவம்
அன்பே சிவம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 380, விலை 150ரூ.
சிவபெருமான் உயிர் அம்சம் என்றால், உடல் சக்தி அம்சமாகும். சிவனும் சக்தியும் இணைந்த சொரூபமே சிவசக்தி சொரூபமாகும். இந்த உலகின் முதல்வர், அரசன், தலைவன், இறைவன் சிவபெருமானே, ஆதலால் அவர் ஈசன், ஈஸ்வரன் என அழைக்கப்படுகிறார். சிவன், சக்தியோடும் உயிர்களோடும் உலகத்தோடும் இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பே அத்வைதமாகும். சக்தி, சிவம் இருவருமே ஞான வடிவானவர்கள். அம்மையும் அப்பனுமாகிய இருவரும் இணைந்து இயங்குவதே உலக இயக்கமாகும். இப்படி ஏராளமான தகவல்கள். -எஸ். குரு.
—-
உலகம் உங்கள் கைகளிலே உலகப் புகழ் சிறுகதைகள், பேரா. கி. நடராஜன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 142, விலை 70ரூ.
டால்ஸ்டாய், செகாவ், மாப்பசாந்த், டாஸ்டாவ்ஸ்கி, சோமர்செட் மாம், ஓ ஹென்றி, ஆஸ்கார் வைல்ட், ஜேம்ஸ் தர்பர், ஆர்.கே. நாராயணன், ஆர்தர் கானன்டாயில் போன்ற பெருமக்கள் எழுதிய 10 சிறுகதைகள் அடங்கிய இலக்கியப் பொக்கிஷம். மனம் ஒத்த தம்பதிகளின் தூய அன்பை சொல்லும், மேகிக்களின் அன்பளிப்பு என்ற கதையும், வெளி வேஷக்காரர்களை சாடும் மூன்று துறவிகள் என்னும் டால்ஸ்டாய் கதையும், ஷெர்லிக் ஹோம்ஸ் துப்பறியும், புள்ளி போட்ட வளையம் என்ற ஆர்தர் கானன்டாயில் சிறுகதையும், இந்த தொகுதியிலுள்ள முக்கியமான கதைகள் என்று சொல்லலாம். நன்றி : தினமலர், 4/12/2011.