திருக்குறள் கதைகள் 50

திருக்குறள் கதைகள் 50, லதா, அருண் பதிப்பகம், விலை 150ரூ. கடவுள் நம்பிக்கை, அறிவே பலம், நன்றி மறவாதே, விருந்தோம்பல், உழைப்பின் உயர்வு, நல்ல நட்பு, நீதி தவறாமை உள்ளிட்ட தெதாகுப்புகளைக் கொண்ட குழந்தைகளுக்கான நூல் இது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:.https://www.nhm.in/shop/1000000026700.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

என் உயிரே என் உறவே

என் உயிரே என் உறவே, (நாவல் பாகம் 1, 2) பிரவீணா, அருண் பதிப்பகம், பக். 492, 412, விலை தலா 200ரூ. சினிமா ரசிகர்களுக்கு உகந்த நாவல், ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பதுபோல், இந்த நாவலைப் படித்து மகிழலாம். நாவலின் கதாநாயகன் பாலா. கதாநாயகி கீர்த்தனா, பாலா முதலில், மது என்ற பெண்ணைத்தான் காதலிக்கிறான். சந்தர்ப்பவசத்தால் அந்த மது, அவன் வாழ்வில் இருந்து விலகிப் போய்விடுகிறாள். எனவே கீர்த்தனாவை மணமுடிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு. தன் தந்தைக்கு பாலா பண உதவி செய்கிறான் […]

Read more

திறமைதான் நமது செல்வம்

திறமைதான் நமது செல்வம், இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 150, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-3.html வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்து கொண்டுள்ளன. ஆனால் மற்ற நூல்களில் இருந்து இந்நூல் வேறுபங்டடு இருப்பதை மறுப்பதற்கில்லை, நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளிய முறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. இல்லறம் நல்லறம் ஆவது எப்போது? என்று முதல் கட்டுரையில் சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல கேள்வி […]

Read more

356 தலைக்கு மேல் கத்தி

356 தலைக்கு மேல் கத்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-8.html அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு மாநில அரசுகளை கலைத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாகும். அதாவது மாநில அரசுகளின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றது. தமிழக முதல் அமைச்சர்களாக இருந்த மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜானகி அம்மாள், கேரளாவின் முதல் அமைச்சராக இருந்த கம்யூனிஸ்டு தலைவர் நம்பூதிரியோடு, ஆந்திர முதல் அமைச்சராக இருந்த […]

Read more

மனோதத்துவம்

மனோதத்துவம், டாக்டர் அபிலாஷா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-7.html மன நலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவது எப்படி என்பதை விளக்கும் நூல். வாழ்க்கையில் வெறுப்படைந்து, விரக்தியின் விளிம்பிற்கே சென்று, தவறான முடிவைத் தேடுகிறவர்களுக்கு, வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க முடியும் என்கிறார் நூலாசிரியர் டாக்டர் அபிலாஷா. தான் சந்தித்த மன நோயாளிகள் பற்றியும், அவர்களை மீட்ட அனுபவங்கள் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். கவிஞர் வைரமுத்து இந்த நூலை மதிப்பிடுகையில் இதை வாசிப்பவர்கள் […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா, அருண் பதிப்பகம், திருச்சி 1, பக். 672, விலை 125ரூ. தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா. சுப்பிரமணியப்பிள்ளை. அவருக்குப் பின் மு. அருணாசலம், மு. வரதராசன், தி.வை. சதாசிவபண்டாரத்தார், க. வெள்ளைவாரணர் […]

Read more

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சுகன்யா பாலாஜி, அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 120ரூ. மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியோடு தொடங்கும் கதை, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு பக்கத்திற்கும் படிக்கத் தூண்டும் வகையில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் சுவாரசியமாக அமைந்துள்ளன. புதுமணத்தம்பதிகள் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள், கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈ.கோ. பிரச்சினைகள், கதாபாத்திரங்கள் வடிவில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. தன்னம்பிக்கையை ஊட்டும் வகையிலும் கதை அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி; தினத்தந்தி, 20/3/13.   —-   சின்ன […]

Read more

ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம்

ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், எண் 107/8, கௌடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 396, விலை 175ரூ. 33 தலைப்புகளில் மகாவிஷ்ணு குறித்த கதைகளின் தொகுப்பு. மகாவிஷ்ணு, லட்சுமி, பூ தேவி, நீளா தேவி கதைகளுடன் துவங்குகிறது. மகாவிஷ்ணுவிடம் இருந்து பிரம்ம தேவர் தோன்றியது. கலைமகள் கதை என விரிந்து அனந்த பத்மநாப சுவாமி, திருப்பதி மலையப்ப சுவாமி, உப்பிலியப்பன், அரங்கநாதர், சுந்தராஜப் பெருமாள் என பெருமாள்களின் கதைகளுடன் செல்கிறது. ஆதிசேஷன், கருடாழ்வான், அனுமன் ஆகியோரின் கதைகளுடன் […]

Read more

அன்பே சிவம்

அன்பே சிவம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 380, விலை 150ரூ. சிவபெருமான் உயிர் அம்சம் என்றால், உடல் சக்தி அம்சமாகும். சிவனும் சக்தியும் இணைந்த சொரூபமே சிவசக்தி சொரூபமாகும். இந்த உலகின் முதல்வர், அரசன், தலைவன், இறைவன் சிவபெருமானே, ஆதலால் அவர் ஈசன், ஈஸ்வரன் என அழைக்கப்படுகிறார். சிவன், சக்தியோடும் உயிர்களோடும் உலகத்தோடும் இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பே அத்வைதமாகும். சக்தி, சிவம் இருவருமே ஞான வடிவானவர்கள். அம்மையும் அப்பனுமாகிய இருவரும் […]

Read more

சிவ தரிசனம்

சிவ தரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீ+ட்டர்ஸ் சாலை, சென்னை – 600 014. பக்: 192, விலை: ரூ. 150. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-7.html காலத்தால் மூத்த சிவ வழிபாட்டை விளக்கும் நூல். சிவன், கணபதி, முருகன், நடராஜர் போன்ற தெய்வ வழிபாட்டின் தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளோடு ஆசிரியர் சிறப்பாக விளக்கி உள்ளார். சிவன் உயர்ந்த தபஸ்வீ. மங்களம் என்பது சிவனுக்கு மட்டுமே பொருந்தும். சத்தி மூலம் சிவனை அடைய முடியும், சிவன் […]

Read more
1 2