மனோதத்துவம்
மனோதத்துவம், டாக்டர் அபிலாஷா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-7.html
மன நலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவது எப்படி என்பதை விளக்கும் நூல். வாழ்க்கையில் வெறுப்படைந்து, விரக்தியின் விளிம்பிற்கே சென்று, தவறான முடிவைத் தேடுகிறவர்களுக்கு, வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க முடியும் என்கிறார் நூலாசிரியர் டாக்டர் அபிலாஷா. தான் சந்தித்த மன நோயாளிகள் பற்றியும், அவர்களை மீட்ட அனுபவங்கள் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். கவிஞர் வைரமுத்து இந்த நூலை மதிப்பிடுகையில் இதை வாசிப்பவர்கள் தங்கள் மனதை ஆள்வார்கள் என்பதில் ஐயம் இல்லை. வாசித்தபடி வழி நடக்கவும், வழி நடத்தவும் இந்நூல் ஓர் இனிய வரவு என்று குறிப்பிட்டிருப்பது பொருத்தமானது.
—-
தமிழ் இலக்கிய வரலாறு, பேராசிரியர் இராஜா. வரதராஜா, அருண் பதிப்பகம், தரைத்தளம், சி, பாலாஜி பிளாக், எஸ்.பி.ஐ. காலனி, கண்டோன்மெண்ட், திருச்சி 1, விலை 150ரூ.
ஏற்கனவே, பல்வேறு காலக் கட்டங்களில் தமிழ் இலக்கிய வரலாறு டாக்டர் மு. வரதராசனார உள்பட சில ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளது. இப்போது முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா இருவரும் இணைந்து 742 பக்கங்களில் தமிழ் இலக்கிய வரலாறு நூலை சிரமப்பட்டு உருவாக்கி இருக்கிறார்கள். சங்க காலத்தில் இருந்து இக்காலம் வரை வெளிவந்துள்ள நூல்கள் பற்றியும் புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றியும் முக்கிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. நடுநிலையுடன் எழுதப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது. தற்கால எழுத்தாளர்கள் பற்றிய மதிப்பீடும் பாரபட்சமின்றி அமைந்துள்ளது. குறைந்த விலையில் தரமான படைப்பு. நன்றி: தினத்தந்தி, 31/7/13.
