356 தலைக்கு மேல் கத்தி
356 தலைக்கு மேல் கத்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-8.html
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு மாநில அரசுகளை கலைத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாகும். அதாவது மாநில அரசுகளின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றது. தமிழக முதல் அமைச்சர்களாக இருந்த மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜானகி அம்மாள், கேரளாவின் முதல் அமைச்சராக இருந்த கம்யூனிஸ்டு தலைவர் நம்பூதிரியோடு, ஆந்திர முதல் அமைச்சராக இருந்த என்.டி.ராமாராவ் உள்பட பல மந்திரிசபைகளை மத்திய அரசு கலைத்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த 11 ஆண்டு காலத்தில் 29 மந்திரிசபைகளை டிஸ்மிஸ் செய்தார். அதுபற்றிய விவரங்களையும், திரைமறைவில் நடந்த நிகழ்ச்சிகளையும் சுவைபட எழுதியுள்ளார் தி.சிகாமணி. நன்றி: தினத்தந்தி
—-
ஸ்ரீமகா விஷ்ணு மகாத்மியம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600014, பெக். 396, விலை 175ரூ.
ஸ்ரீமத் பாகவதம், பதினொன் புராணங்கள் ஸ்ரீ வைணவம், 108 திவ்ய தேசங்கள், பன்னிரு ஆழ்வார்களும் பிரபந்தங்களும், பகவத்கீதை, ஸ்ரீ அனந்த புராணம் போன்று பல நூல்களில் கொட்டிக் கிடக்கும் விஷ்ணுவைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, பக்தி சிரத்தையுடன் இந்நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஸ்ரீ மகா விஷ்ணுவின் தசாவதாரங்களுடன், அவரின் பிற அவதாரங்கள், 108 திவ்ய தேசங்களைப் பற்றிய தவல்கள், ஸ்ரீசக்கர மகிமை என்று பல்வேறு விஷயங்களையும் ஆசிரியர், அருமையாக விளக்கியிருக்கிறார். வைணவர்கள் மட்டுமின்றி பிறரும் படித்துப் பயம்பெறலாம். -மயிலை சிவா நன்றி: தினமலர், 15/9/2013.