தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. அருணாசலம், பேராசிரியர் இராஜா வரதராஜா, அருண் பதிப்பகம், திருச்சி 1, பக். 672, விலை 125ரூ.

தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா. சுப்பிரமணியப்பிள்ளை. அவருக்குப் பின் மு. அருணாசலம், மு. வரதராசன், தி.வை. சதாசிவபண்டாரத்தார், க. வெள்ளைவாரணர் போன்ற தமிழறிஞர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப பல கூடுதல் தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் இலக்கியத்தைக் கால வரிசைப்படி பதிவு செய்வது மிகவும் அவசியம். அந்தவகையில் தொடர்ந்து பலர் இப்பணியில் ஈடுபட்டு புதிய புதிய படைப்பாக்கங்களைப் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் இந்நூல் புதிய வரவு. கூடுதல் தகவல் என்ன பதிவாகியுள்ளது என்றால், நாவல், நாடகம், சிறுகதை, புதுக்கவிதை, ஹைக்கூ, பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு, இலக்கியம், ஊடகத் தமிழ், திரைப்படத் தமிழ், திரையிசைத் தமிழ், புலம் பெயர்ந்தோர் இலக்கியம், திருநங்கைகள் இலக்கியம் என சமகாலத்தில் உருவான படைப்பாளிகள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் என அனைத்தும் பதிவாகியுள்ளன. அதுமட்டுமல்ல, போட்டித் தேர்வுக்குப் பயன்படும் வகையில் இலக்கிய வினாவிடை, சாகித்ய அகாதெமி விருதபெற்றவர், மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றவர், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உலகத் தமிழ் மாநாடுகள் எனக் கூடுதல் தகவல்கள் நூலை மேலும் மெருகேற்றியுள்ளன. நன்றி: தினமணி, 17/9/12.  

—-

 

தலைமுடியை பாதுகாக்க தகுந்த ஆலோசனைகள், இ. செல்வி, இளங்கோ வெளியீடு, மகா பதிப்பகம், 3, சாய்பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, விலை 40ரூ.

தலைமுடி குறித்த சுவாரசியமான தகவல்கள், முடி உதிர்வது ஏன்? தடுக்கும் வழிமுறைகள், ஷாம்பு-ஹேர் டை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், ஆரோக்கியமான முடிக்கு தேவையான சத்துணவுகள், எண்ணெய் தேய்க்கும், மசாஜ், வழுக்கை, பொடுகு நரையை போக்கும் வழிகள், நெற்றி அமைப்புக்கு ஏற்ற முடி அலங்காரம் மற்றும் எண்ணெய் தயாரிப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 29/5/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *