பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்
பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், பாண்டூ, கந்தகப் பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணஞ்சான் தெரு, சிவகாசி 626123, விலை 100ரூ.
புதுப்புது சிந்தனைகளை ஊட்டக்கூடியதாக இந்த கவிதை நூல் விளங்குகிறது. மொழி, மண், இனம் போன்றவை மீது கவிஞருக்கு உள்ள பற்று இந்த படைப்பு மூலம் விளங்குகிறது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள 30 ஹைக்கூ கவிதைகளும் அருமை.
—-
கண்ணாடிப் பார்வையில் திருக்குறள், அகில் பதிப்பகம், 35, ஹச்ஐஆர் தெரு, கோட்டை, கோவை 641001, விலை 120ரூ.
கண்ணாடி மூலமாக மட்டுமே படிக்கக் கூடிய விதத்தில் திருக்குறளை எழுதியிருக்கிறார், வழக்கறிஞர் மு. ராஜா ஷெரீப். புத்தகத்துடன் கண்ணாடியையும் தருகிறார்கள். புதிய முயற்சி.
—-
வோர்ட்சுவொர்த்து கவிதைகள், வான்முகில், மீனாகோபால் பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 200ரூ.
வில்லியம் வேர்ட்சுவொர்த் உலகப்புகழ் பெற்ற கவிஞர். அவரது ஆங்கில கவிதைகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக தமிழில் தந்துள்ளார் ஆசிரியர் வான்முகில். இயற்கையின் எழிலை கவிதையாக தீட்டுவதில் வல்லவரான வோர்ட்சுவொர்த்துவின் கவிதைகள், துன்பம் நிறைந்த உலகின் சிக்கல்களை அவிழ்த்து அமைதி அடைய செய்யக்கூடியவை. கவிதைகளோடு வேர்ட்சுவொர்த்தின் வாழ்க்கை வரலாறும், இடம்பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/7/13.