சிவ தரிசனம்
சிவ தரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீ+ட்டர்ஸ் சாலை, சென்னை – 600 014. பக்: 192, விலை: ரூ. 150. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-7.html
காலத்தால் மூத்த சிவ வழிபாட்டை விளக்கும் நூல். சிவன், கணபதி, முருகன், நடராஜர் போன்ற தெய்வ வழிபாட்டின் தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளோடு ஆசிரியர் சிறப்பாக விளக்கி உள்ளார். சிவன் உயர்ந்த தபஸ்வீ. மங்களம் என்பது சிவனுக்கு மட்டுமே பொருந்தும். சத்தி மூலம் சிவனை அடைய முடியும், சிவன் வெளிப்படுத்திய ஞானத்தின் உருவே முருகன். தபஸ்வீக்களின் தலைவரானவர் சிவன். எளிமையான துறவு வாழ்வே சைவ வாழ்வாகும். அதனால் தான் வேதங்கள். ’திடகாத்திரமான உடலோடு அனுபவித்து, முழுமையான வாழ்வை இறைவனுக்கு சமர்ப்பிப்போம்’ என்கின்றன. இப்படி பல ஆற்றொழுக்கான கருத்துகள் நூல் முழுவதும் உள்ளன. வேதம் தற்காலத்திற்கு ஏற்றதல்ல என்ற கருத்தை புறந்தள்ளும் ஆசிரியர், ‘எதிரிகளும் வாழ வேண்டும்; ஆனால், அவர்கள் கொடூர எண்ணம், நல்ல குணமாக மாற வேண்டும்’ என்ற வேதத்தின் விழுமிய கருத்தையும் சுட்டிக் காட்டுகிறார். ஆன்மிகத்தையும், பாரத பண்பாட்டு பதிவுகளையும் விளக்கும் நூல்.
—
அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், ஸ்டீபன் ஆர். கவி, தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷர்ஸ் ஹவுஸ், 2 வது மாடி, உஷா ப்ரித் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் – 462 003, பக்கம்: 507, விலை: ரூ.325.
ஆளுமை மேம்பாட்டு புத்தகங்களுக்கு வரவேற்பு உள்ளது. அந்த வகையில், இந்த புத்தகம், மனித வாழ்வின் ஒவ்வொரு முக்கிய அம்சங்களையும் நன்கு ஆராய்ந்து, நம் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை பட்டியலிட்டு உள்ளது. நம் படைப்புத்திறன், கற்பனைத் திறன் நம்மை எந்த அளவிற்கு மாற்றும்? சுய விழிப்புணர்வால் கிடைப்பது என்ன? நேரத்தை எவ்வாறு நிர்வகித்து முன்னேற்றம் காண்பது என்பது பற்றி மிகவும் விரிவாக, தகவல்கள் தரப்பட்டுள்ளன. முன்னேறத் துடிக்கும் எல்லோருக்கும் உதவும் இந்த நூல். – பாலாஜி
—
ஸ்ரீ மகா விஷ்ணு மகாத்மியம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600 014. பக்கம்: 346, விலை: ரூ. 175.
ஸ்ரீ மகா விஷ்ணுவின் தசாவதாரங்கள், தேவியர் பெருமை என, 33 தலைப்புகளில் அருமையான எளிய நடையில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது இந்நூல். பதினெண் புராணங்கள், ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, ஸ்ரீ அனந்தபுராணம் போன்ற ஆன்மிக நூல்களின் சாராம்சத்தைப் பிழிந்து, பக்தி ரசம் சொட்டும் ஆன்மிகக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாசிரியர் உமா பாலகுமார் கொடுத்துள்ளார். ஆன்மிக அன்பர்கள் அனைவரும் படித்து, பரவசம் அடைய வேண்டிய நூல். – என். ஆர். நன்றி: தினமலர் (31.3.2013).