தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், டாக்டர் டி. நாராயண ரெட்டி, விகடன் பிரசுரம், பக். 184, விலை 125ரூ.

தம்பதியரிடையே பல்வேறு தீவிரமான உளவியல் சிக்கல்கள் தோன்றவும், இருவரிடையே சண்டை சச்சரவுகள், விரோதம் தோன்றவும், தாம்பத்தியம் முறிவு படவும் முக்கியக் காரணமாக இருப்பது பாலியல் பிரச்னைகள் தான்!

ஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது துவங்கி, முதுமை எல்லை வரை குறுக்கு வெட்டாக ஆராய்ந்து, அனைத்து விதமான செக்ஸ் சந்தேகங்களுக்கும், வாசகர்கள் எழுப்பிய ஐயங்களுக்கும், சரியான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.

டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்தபோது, வாசகர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் இதழ்தோறும் விளக்கம் அளித்தார். அந்தத் தொடரின் முழுத் தொகுப்பே நூலாகியிருக்கிறது!

படுக்கையறை சங்கதிகளை விரசம் இல்லாமல் கூறி, அனைத்துக்கும் விடை கூறும் இந்த நூல், செக்ஸ் மீதான பார்வையைச் சீராக்கும்!

– எஸ்.குரு.

நன்றி: தினமலர், 14/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *