உவர்

உவர்,  இரா.சிவசித்து, மணல்வீடு, பக்.152, விலை ரூ.150;  மணல்வீடு, ஓலைச்சுவடி, கனலி ஆகிய இதழ்களில் வெளிவந்த 9 சிறுகதைகளின் தொகுப்பு. தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்போது, கிராம மக்களின் வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம் வாசகருக்குள் நிகழ்கிறது. பாத்திரங்களின் பேச்சு, கதையாசிரியரின் விவரிப்பு, நிகழும் சம்பவங்கள் அனைத்தும் கிராமத்து மண்ணில் வேர்விட்டு வளர்ந்தவை. உவர் சிறுகதையின் நீலமேகம் மாமா போன்ற மனிதர்களை இப்போதும் பார்க்க முடியும். சிறிய, பெரிய விஷயங்களுக்காக மனிதர்களுக்குள் நடைபெறும் அடிதடி சண்டைகள், வசவுகள் கூடவே அவற்றையெல்லாம் மீறி பொங்கி வழியும் அன்பு […]

Read more

முறையிட ஒரு கடவுள்

முறையிட ஒரு கடவுள், சர்வோத்தமன் சடகோபன், மணல்வீடு, பக்.160, விலை ரூ.150.   சர்வோத்தமன் சடகோபன் எழுதிய முறையிட ஒரு கடவுள் எனும் சிறுகதைத் தொகுப்பு அருமையான உரையாடலை நம்முள் நிகழ்த்துகிறது. வார்த்தைகளில் சிக்கல்களைக் கொடுக்காமல் கதைகளைப் பரிமாறுவதில் தன்னை சிறந்த எழுத்தாளராக நிலைநிறுத்தியுள்ளார் சடகோபன். மொத்தம் 13 கதைகள் இடம்பெற்றுள்ள இந்த சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது ஏற்படும் எதிர்பார்ப்பும், ஆவலும் அனைத்து கதைகளிலும் நம்மை விடாமல் பீடித்திருக்கின்றன. மணல்வீடு, காலச்சுவடு ஆகிய இலக்கிய இதழ்களில் தொடங்கி தமிழினி, தளம் உள்ளிட்ட இணைய […]

Read more

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம்

வெட்டவெளியில் ஒரு கரிசல் கிராமம், சமயவேல், மணல்வீடு, விலை 100ரூ. ஊர் நினைவுகள் பாரதி பிறந்த எட்டயபுரம் அருகே வேம்பூர் என்ற கிராமத்தில் பிறந்து இப்போது மதுரையில் வாழ்பவர் கவிஞர் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் சமயவேல். இவர் தான் பிறந்த கரிசல் மண் கிராமத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். அந்த கிராமத்தின் வெட்டவெளியை, அது 360 டிகிரியில் காண்பிக்கும் அடிவானத்தை, விளாத்திகுளம் சுவாமியின் பாட்டில் கேட்கும் அந்த வெட்ட வெளியின் இசையை இங்கே பதிவு செய்திருக்கிறார் அவர். பால்யமும் […]

Read more

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள்

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள், ஜீவன் பென்னி, மணல்வீடு வெளியீடு, விலை 90ரூ. உதிரி மனிதர்கள். ஜீவன் பென்னியின் இரண்டாவது கவிதைத் தொகுதி அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள். அளவில் சிறியதும் பெரியதுமான இக்கவிதைகள் நகர வாழ்வின் உதிரி மனிதர்களைப் பற்றித்தான் அதிகம் பேசுகின்றன. நீள அகலங்களில் சிக்காது நகர வாழ்வின் கீழ் அடுக்குகளில் சுற்றித் திரியும் மனிதர்கள் தன் அழுக்குத் தோலுடன் நடமாடுகிறார்கள். உண்கிறார்கள். உணவகங்களில் கோப்பை கழுவுகிறார்கள். சீருடைக் காவலாளியாக சூரியனுக்குக் கீழே நிற்கறிர்கள். சமயங்களில் வெறுமனே இருக்கிறார்கள். […]

Read more