கரோனாவை வெற்றி கொள்வோம்

கரோனாவை வெற்றி கொள்வோம், டாக்டர் கு. கணேசன், தமிழ் திசை,விலைரூ.200.   ‘தினமலர்’ உட்பட இதழ்களில் கொரோனா குறித்தும், விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், தடுப்பூசியின் தேவை பற்றியும் எழுதி குவித்தவர் டாக்டர் கணேசன். இவரது கைவண்ணத்தில், 51 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கொடிய தொற்றின் அத்தனை அம்சங்களையும் எளிய தமிழில் அலசியுள்ளார். கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு பதில் இந்த நுாலில் இருப்பது ஆச்சரியம். ஒரு பதிலையும் விட்டு வைக்காமல் முழுமையாக எழுதியிருக்கிறார். நோய் பற்றி முழுமையாக எழுதப்பட்டிருப்பதால், இது மருத்துவ நுால் […]

Read more

தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு

தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு, முத்தலாங்குறிச்சி காமராசு, தமிழ் திசை, விலை 170ரூ. வீரத்தின் விளை நிலமாகத் திகழும் தமிழகத்தின் தென் பகுதியில் சீரோடும் சிறப்போடும் விளங்கிய நட்டாத்தி ஜமீன், சாத்தான் குளம் ஜமீன் ஆகியவர்களின் மறைந்து போக இருந்த வரலாற்றைத் தேடிப் பிடித்து, நல்ல ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர். இந்த வரலாறு தொடர்பான கள ஆய்வு மூலமும், இந்த ஜமீன்களின் வாரிசுகளை நேரில் சந்தித்தும் பெற்ற விவரங்கள் மலைக்க வைக்கின்றன. இந்த ஜமீன்களின் வீர வரலாறு, காதலால் அழிந்து போன ஜமீன் […]

Read more

குறள் இனிது

குறள் இனிது, சோமவீரப்பன், தமிழ் திசை , விலை 225ரூ. உலகம் போற்றும் தமிழ் இலக்கியமான திருக்குறளில் சொல்லாத கருத்துகளே இல்லை எனலாம். தலைமைப் பண்பு, ஆளுமை, மேலாண்மை தத்துவம் ஆகியவற்றையும் திருவள்ளுவர் திறம்படத் தந்து இருக்கிறார். இந்தத் தலைப்புகளில் உள்ள 125 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள ஆழமான கருத்துகளை, ஆங்காங்கே நகைச்சுவையுடனும், எளிய முறையிலும் விளக்குவதோடு, இன்றைய வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதும் அழகாகத் தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027269.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more