தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு
தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு, முத்தலாங்குறிச்சி காமராசு, தமிழ் திசை, விலை 170ரூ.
வீரத்தின் விளை நிலமாகத் திகழும் தமிழகத்தின் தென் பகுதியில் சீரோடும் சிறப்போடும் விளங்கிய நட்டாத்தி ஜமீன், சாத்தான் குளம் ஜமீன் ஆகியவர்களின் மறைந்து போக இருந்த வரலாற்றைத் தேடிப் பிடித்து, நல்ல ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர்.
இந்த வரலாறு தொடர்பான கள ஆய்வு மூலமும், இந்த ஜமீன்களின் வாரிசுகளை நேரில் சந்தித்தும் பெற்ற விவரங்கள் மலைக்க வைக்கின்றன. இந்த ஜமீன்களின் வீர வரலாறு, காதலால் அழிந்து போன ஜமீன் போன்ற விவரங்கள் மர்ம நாவலைப் போல தரப்பட்டுள்ளன.
பாட்டி கதை சொல்லும் பாங்கில், வட்டார மொழி நடையுடன் இவற்றைத் தந்து இருப்பதால், இந்த ஜமீன்களின் வரலாற்றை விறுவிறுப்பான கதை போல சுவைபட படிக்க முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 30/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027671.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818