வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்,எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.448; ரூ.420;

வைணவ தத்துவம், வைணவத் திருத்தலங்கள் பற்றிய இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.

முதற்பகுதியில் வைணவ தத்துவம் பற்றிய விளக்கம், வைணவ ஆகமங்கள், வைணவத்தின் சடங்குகளும் மந்திரங்களும், வைண விழாக்கள், ஆலய வழிபாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பகுதியில் திருவரங்கம்,திருக்குடந்தை, திருநந்திபுர விண்ணகரம், திருவெள்ளியங்குடி, திருக்கச்சி, திருநின்றவூர், காஞ்சிபுரம், திருநீர்மலை, திருப்பதி, திருப்புலியூர் உள்ளிட்ட 108 வைணவத் திருப்பதிகளைப் பற்றி விரிவான தகவல்களைக் கூறுகின்றன.

ஒவ்வொரு திருப்பதியின் முக்கியத்துவம், மூலவர், உற்சவர், தாயார், விமானம், அத் திருப்பதி அமைந்துள்ள இடம் ஆகிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

பிற ஆலயங்கள் பகுதியில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஆலயம், மலைமண்டலப் பெருமாள் கோயில், விட்டலேஸ்வரர் ஆலயம், ஓரகடத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் ஆலயம், பொன் விளைந்த களத்தூர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருக்கோயில் உட்பட பல கோயில்களின்  வரலாறு, சிறப்பம்சங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், கோயிலுக்குச் செல்ல விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

வைணவத்தின் ஆன்மிகச் சிந்தனைகள், அவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்கும் செயல்முறையான வழிபாடுகளைச் செய்ய உதவும் திருத்தலங்கள், அவற்றைச் சென்றடைய உதவும் நடைமுறை சார்ந்த தகவல்கள் என ஒரு முழுமையான வைணவ நூலாக இந்நூல் மிளிர்கிறது.”,

நன்றி: தினமணி, 5/3/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027986.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published.